CAA Hindutva Uttar Pradesh

உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!

யோகி அரசின் வன்முறை வெறியாட்டம்?

உபியின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று உபி போலீசாரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களை பார்க்கவும், பத்திரைகைகள் வெளியிடும் தரவுகளையும் படிக்கும் போதும் மனம் பதறுகிறது.

டிசம்பர் 20 , அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து முஸ்லிம்கள் கூட்டமாக காந்தி சிலை முன்பு குழுமினர். அங்கிருந்து மக்களின் அணிவகுப்பு தொடர்ந்தது அதனை தடுத்து நிறுத்திய போலீசாரில் சிலர் ,மக்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும், கூட்டத்தில் நின்றிருந்து ஐந்து சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச்சென்றுள்ளனர். அவர்களில் 13-17 வயதிற்குட்பட்ட பள்ளி சிறுவர்கள் ஆவர்.

போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட அனஸ்

அவர்களில் யாரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில்லை, பள்ளிக்கு சென்றுவிட்டு மதிய தொழுகைக்கு பின் பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என கூறுகிறார் நஜினா நகராட்சி மன்றத் தலைவர் கலீலுராஹ்மான் என்பவர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என எத்தனை கெஞ்சியும் கூட போலிசார் விடவில்லை, போலீசார் கைது செய்த 100 பேரில் 21 பேர் சிறுவர்கள் என்பதும் அதில் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன, 20 வயது சுலைமான், UPSC தேர்வுகளுக்காக இரவும் பகலும் படித்துக்கொண்டிருந்த மாணவர் என்பதும், 21 வயது அனஸ் என்பவர் தனது ஏழு மாத குழந்தைக்காக பால் வாங்கிவரச்சென்றவர் என்பதும் வேதனையான விஷயம்.

Image may contain: 1 person, baby
படத்தில் : இறந்துபோன அனஸ் என்பவரின் ஏழு மாத குழந்தை

அவர்களை இரண்டு நாளைக்கு பிறகு வெளியே விட்டிருக்கும் காவலர்கள், 48 மணிநேரமும் அச்சிறுவர்களிடம் போலிசார் மிக கடும்போக்கினை கையாண்டதாக சிறுவரில் ஒருவர் கூறுகிறார். தற்போது அச்சிறுவன் சுயமாக நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளான். அந்த இரண்டு நாளும் காவலர்கள் அவர்களை உறங்க விடவில்லை என்றும், குளிருக்கு போர்வை கேட்டு கொடுக்கவில்லை என்றும், உணவும் தண்ணியும் கொடுக்காமல் ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கும் ஒருமுறை அடித்து மிதித்துவிட்டு சென்றதாகவும் கூறினார்.

சுட்டு கொல்லப்பட்ட அனஸின் தந்தை அர்ஷத் ஹுசைன்
(Photo: Munish Pandey/India Today)

எங்களுடன் இருந்த 13 வயது சிறுவன், அவனையும் அறியாமல் உறங்க தொடங்கிவிட்டான், அவனை அடித்து மிதித்த போலீஸ் ஒருவர் அருகிலிருந்த என்னையும் லத்தியைக் கொண்டு அடித்து இவன் உறங்கினால் உன்னையும் அடிப்பேன் என்று கூறிய காரணத்தால் அச்சிறுவனது கண்கள் மூடாமல் என் விரலை வைத்து கண்ணுப்பட்டையை பிடித்துக்கொண்டிருந்தேன்.

https://twitter.com/i_theindian/status/1208799935870558208
அனஸின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா

எங்களை வெளியே அனுப்பிய போது , போலீசாரில் ஒருவர் எங்களை அழைத்து, இனிமேல் போராட்டம் அது இது என்று இறங்கினால் கொன்றே விடுவோம் என மிரட்டிவிட்டனர் என்கிறார் அவர். தங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருப்பதாகவும் கடந்த மூன்று நாளாக எனக்கு நிம்மதியாக உண்ணவும் உறங்கவும் முடியவில்லை..போலீஸ் அடித்த வலி எங்களை கொல்கிறது என்றான் பரிதாபமாக.

ஆக்கம் : நஸ்ரத்