பணமதிப்பிழப்பு எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதோ அதேபோன்றுதான் குடியுரிமை திருத்த சட்டமும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது
பணமதிப்பிழப்பின் போது கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் மோடி எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள் என்றும் சித்தரிக்கப்பட்டது, மேலும் ஏடிஎம் க்யூவில் நின்று தேசப்பற்றை நிரூபிக்க சொல்லி அதனை கொண்டாடினார்கள், இறுதியில் அனைவரும் பாதிக்கப்பட்டோம்.
அது தவறு என்று உணரும் தருவாயில் அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கிறோம்..
குடியுரிமை மசோதாவும் அப்படித்தான் இது வெறும் வெளிநாட்டிலிருந்து வரும் அகதிகள் சம்பந்தப்பட்டது அல்லது முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது
உண்மையில் இது அனைவரையும் பாதிக்கும் முன்பு எப்படி கருப்பு பணம் இல்லாதவர்கள் தன்னிடம் இருப்பது வெள்ளை பணம் என்று நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோ அதே போன்று இப்போதும் ஒவ்வொருவரும் தாங்கள் அகதிகள் அல்ல எங்கள் தாத்தா பாட்டி இங்கு தான் பிறந்து வளர்ந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
முன்பு பேங்க் ஏடிஎம் வாசலில் நின்றோம் இனி NRC அரசு அலுவலகங்கள் அல்லது வெளிநாட்டினர் தீர்ப்பாயம் முன்பு தாத்தா பாட்டியோட பர்த் சர்டிபிகேட் அல்லது தாத்தாவோட முக்கியமான அரசு ஆவணத்தை கையில் வைத்துக் கொண்டு நிற்க வேண்டி வரும்
உங்கள் முன்னோர்களின் ஆவணங்களை சரிபார்க்க வரும்போது அல்லது உங்களை வரச் சொல்லும்போது நீங்கள் செல்ல முடியவில்லை அல்லது ஆவணங்கள் இல்லை என்றால் தேசிய குடிமக்கள் ஆவணத்தில் உங்கள் பெயர் இருக்காது, அப்படி விடுபட்டவர்கள் அகதிகளாக கருதப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப் படுவார்கள்..
கசப்பான உண்மை என்னவென்றால் 90 களுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பர்த் சர்டிபிகேட் இருக்காது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தான் பர்த் சர்டிபிகேட் ஆக கருதப்படுகிறது அப்படியிருக்கையில் தாத்தா பாட்டியோட பர்த் சர்டிபிகேட் எத்தனை பேரால் சமர்ப்பிக்க முடியும்? படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் படிக்காத கோடிக்கணக்கான மக்கள் ரோட்டோரம் வாழ்கின்ற மக்களின் நிலை என்னவாகும்?
முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கசப்பான செய்தி என்னவென்றால் அசாமில் ஆவணம் சமர்ப்பிக்க முடியாத 19 லட்சம் பேரில் 16 லட்சம் பேர் இந்துக்கள் அவர்களில் வெறும் 31,411 பேர் மட்டும் தான் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது
முன்பு தேசப்பற்றை நிரூபிக்க சொன்னார்கள் இப்போது நீ இந்திய குடிமகன் என்று நிரூபி என்கிறார்கள்.
இது புரியாமல் சிலர் இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்டது என நினைத்து மகிழ்வது பரிதாபம்.
CAA/NRC is Demonetisation of Citizenship
ஆக்கம்:முத்து கிருஷ்ணன் ( சிறிய மாறுதல்களுடன்)