Assam CAA NRC

NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள்.

நானும் டில்லியில் இருந்து ரூபாய்.42,000 செலவு செய்து எங்கள் மூவருக்குமாக கவுஹாத்திக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம், நாங்கள் இந்தியர்கள் தான் என நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு காத்திருந்த நீண்ட வரிசையில் நின்றோம், எங்களை போல பலருக்கும் உடனடியாக ஆதாரங்களை திரட்ட அவகாசமோ, பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்தும் அரசு ஆவணக்காப்பகங்களில் இருந்தும் உடனடியாக அவற்றை பெற முடியாத நெருக்கடிகள் இருந்தன, பலருக்கு பொருளாதாரமே பிரச்சனையாக இருந்தது.

எங்களுக்கு அந்த பட்டியலில் இடம்பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏனெனில், 2016ம் ஆண்டு முதல் என் அம்மா பெயரில் ஒரு வழக்கு போய்க்கொண்டிருந்த்து, அது அவர் இந்தியர் தானா இல்லையா? என்பதை வைத்து நடந்துகொண்டிருந்த்து. என் அம்மா தற்போதைய அசாம் பகுதியில் வங்காள பெற்றோருக்கு பிறந்தவர் தான் எனினும் எனது தந்தை உயிருடன் இல்லாத காரணத்தால் நானும் எனது சகோதரனும் அவர்களது பிள்ளைகள் தான் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது அதிர்ஷ்டவசமாக நாங்கள் அந்த வழக்கில் வெற்றிபெற்றுவிட்டோம்.

இதில் உண்மை என்னவென்றால் , நான் இந்தியாவில் பிறந்துள்ளேன், என்னிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளது, ஆதார் கார்டு மட்டும் இந்திய பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ்கள் உள்ளது, இது எல்லாம் போக நான் ஒரு இந்து என்பதால் எனது என்ஆர்சி ரிஜிஸ்டர் செய்யப்பட்டவிட்டது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு சாத்தியமா? மேற்கூறிய அனைத்து ஆவணங்களும் அவர்களிடமும் இருந்தாலும் அவர்களுக்கு கூடுதலாக பெற்றோரின் சொத்துப்பத்திரங்களும் பட்டா ஆவணங்களும் தேவைப்படுகிறது.

இங்கே முஸ்லிம்கள் பலருக்கு வங்கி கணக்கே இல்லை எனும்போது அவர்களிடம் சொத்துபத்துக்களின் ஆவணங்கள் எங்கிருந்து இருக்கும். அவர்கள் அதை எங்கே போய் தேடூவார்கள். திடுதிப்பென அமல்படுத்தப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது லட்சோப லட்ச முஸ்லிம்களை பிற சமயத்தவர் முன்னிலையில் அவமதிப்பது போன்றதாகும்.

முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தினால் மிகவும் பாதிப்படைந்த பலரில் நானும் ஒருவன், சிறு வயது முதலே இதற்காக பல இன்னல்களை சந்தித்து வந்துள்ளோம் எனவே என்ஆர்சி சரத்துக்களுடன் சிஏஏ சரத்தினையும் ஒன்று சேர்த்து முஸ்லிம்களுக்கு மட்டும் அதை கட்டாயமாக்குவது என்பது நியாயமற்ற செயலாகும்.

இந்த பதிவினை படிப்போர் என்னுடைய இந்த கருத்துக்களுக்கு மாறுபடுவோர் தயவு செய்து என்னுடைய நட்புவட்டத்தில் இருந்து விலகிவிடுங்கள், இது அரசியல் பலாபலனில் உள்ள கருத்துவேற்றுமை அல்ல மாறாக சரித்திரத்தின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களின் முரண்பாடாகும்.

Original Article link : https://m.facebook.com/story.php?story_fbid=10157950622039740&id=581004739

மொழிப்பெயர்ப்பு: நஸ்ரத்