CAA Kerala

சிஎபி : சங் பரிவாரங்களை விமர்சித்து – பினராயி விஜயன் கடும் தாக்கு !

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் அதன் ஜனநாயகத்திற்கும் எதிரானது என கருத்து தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.

இந்திய ஜனநாயகச்சட்டங்கள் தனிமனிதருக்கு கொடுத்திருக்கும் சாதி,மத,மொழி,கலாச்சார,பாலின மற்றும் அவரது தொழில் சார்ந்த அத்தனை உரிமைகளுக்கான மதிப்பினையும் சுதந்திரத்தினையும் குழிதோண்டி புதைக்கும் விதமான இச்சட்டம் நாட்டில் மதரீதியான பிரிவினைகளை உருவாக்கிடவே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Image

மூன்று நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட ஆறு மதம் சார்ந்தவர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றுமுள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை (இஸ்லாம்) பிரித்து வைத்து பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே இதனை மசோதாவில் இருந்து நீக்கவேண்டும்.

இச்சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மத ரீதியான பிரிவினையை உருவாக்கி சமயசார்புள்ள நாடாக இந்தியாவை மாற்ற சங்பரிவார்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது.

இந்தியா எல்லோருக்குமானது, இங்கே சாதி,மத,மொழி,இன பாகுபாடு கிடையாது, இந்நாட்டில் வாழ்வோர் அனைவரும் இந்நாட்டின் குடிமக்களே, அவர்கள் பிரிப்பதும் மத அடிப்படையில் பாகுபாடு பார்த்து பிரிவினையை தூண்டுவது நாட்டினை பிற்போக்குத்தனமாக நகரச்செய்யுமே தவிர ஒருநாளும் முன்னேற்றத்தை தராது. என்று அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்

ஆக்கம் : நஸ்ரத்