இந்திய ஊடகங்களில் மோடி அலையை உருவாக்கி பாஜகவினை ஒட்டுமொத்த இந்திய இந்துக்களின் ரக்ஷ்கரை போல உருவகப்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறச்செய்த பங்கு தலைசிறந்த? ஊடகவியலாளர்கள் என கூறப்படும் டாப்-10 ஜர்னலிஸ்ட்ஸை நாம் நன்றாகவே அறிவோம். அர்னாப் , அமிஷா தேவ்கன் , சுதிர் சௌத்ரி போன்ற சர்க்கஸ் கோமாளிகளையும் மற்றும் பெண்களில் அஞ்சனா காஷ்யப் போன்ற ஆவேசிகளையும் வைத்து ஊடகம் என்கிற பெயரில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இவர்களுக்கு அவார்டுகளும் பதவி உயர்வுகளும் கொடுத்து கூத்தடித்து வந்தாலும் உண்மையான பத்திரிக்கையாளர்களும் நம்முடன் இருக்கிறார்கள்…ஊடகங்கள் தான் அவர்களை நமக்கு முன்னிலைப்படுத்துவதில்லை
இவர்களை Anti-Modi, Anti-BJP , Anti-Hindutva என பல பெயரிட்டு ஆளும் வர்க்கம் கூறிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் தான் தங்களது பணியின் இலக்கணமாக திகழ்பவர்கள். காங்கிரஸ் கைக்கூலி, கம்யூனிஸ்ட் அனுதாபி என இவர்களை குற்றம் சுமத்தினாலும் இவர்கள் நேர்மையின் பக்கமே நிற்கிறார்கள். நடுநிலை என்கிற போர்வை போர்த்திக்கொண்டு பூனைக்கும் காவல் பாலுக்கும் காவல் என்ற இரட்டைநிலையை கடைபிடிக்காமல் குற்றம் செய்தவர் கடவுளேயானாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீரர் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்பதாலே இவர்களை நேர்மை வழுவா எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிடித்துப்போகிறது. கேள்விக்கணைகளில் பாராபட்சமில்லாமல் வார்த்தைகளால் துளைத்துவிடும் சில ஊடக நெறியாளர்களை கீழே காணலாம்.
10)Rajdeep Sardesai – Aaj Tak சேனலில் பணிபுரியும் இவர் — மோடியின் 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்கள் மற்றும் அது தொடர்பான கூட்டுப்பாலியல் பலாத்காரம், போலி என்கவுண்டர்கள் பற்றி அடிக்கடி தனது பேச்சின் இடையே அடிக்குறிப்பிட்டு காட்ட மறவாதவர். 2014 மோடி வெற்றிபெற்றால் ஒவ்வொரு நபரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்படியே இந்துத்துவ குரோத சிந்தனையுடைய ஒவ்வொரு நபரின் வங்கியிலும் 15 லட்சம் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டது என அறிவித்தவர். வங்கிகளில் முத்ரா திட்டத்தின் கீழ் கிராம்ப்புற மக்களை பாஜகவில் சேர்க்கும் பொருட்டு , பணம் கொடுத்து வாக்காளர் சேர்த்த கொடுமைகளையும். தற்போது முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 11,400 கோடிக்கு மேல் வாராகடன் நிலுவையில் நிற்பதையும் குறிப்பிட்டு வெளிப்படுத்தியவர். கிராம்ப்புறங்களில் இருப்பவரிடம் நிலவும் சாதீய கண்ணோட்டத்தை ஊதிப்பொரிதாக்கவும், அவர்களில் உயர்ந்த சாதியாய் இருப்பவரை ஏவிவிட்டு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தவும் பணப்பட்டுவாடா செய்ய பாஜக அரசு வங்கிகளை பயன்படுத்திக்கொண்டது என்ற குற்றச்சாட்டினை வைத்தவர்.
Rajdeep Sardesai-Photo:HT
9) Sonia Singh – NDTVயில் செய்தி வாசிப்பாளராக இருந்து விவாத நெறியாளராக மாறிய இந்த சிங்கப்பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் ஒவ்வொரு பாஜகவினரும் மைக்கை கழற்றிப்போட்டு ஓடுவார்கள். பாஜகவின் தோல்விகளை குறிப்பிட்டு கேள்வியெழுப்பும் இவர் அதற்கு பதில் கிடைக்காத வகையில் வேறு கட்டத்திற்கு மாறவே மாட்டார். இவரது விவாத நிகழ்ச்சிகள் பல பாஜகவினர் செய்யும் தகராறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்படும்.
8) Siddarth Varadharajan – The Wire இணையதள செய்தி ஊடகத்தின் தலைவரும் மேலாளரும், அமெரிக்கவாழ் இந்தியரான இவரது செய்தி ஊடகங்களில் பணியாற்ற அமெரிக்கர்கள் போட்டி போடுவார்கள். மோடி அரசின் தோல்விகளையும் அதனை மறைக்க அவர்கள் செய்யும் அரசியல் பல்டிகளையும் அவ்வப்போது இரண்டு நாட்டு ஊடகங்களிலும் போட்டு தாளிப்பவர். பொருளாதார பின்னடைவிற்கு பிறகும் பாஜகவினருக்கும் அவர்களது கைக்கூலிகளுக்கும் தளராத பணப்பரிவர்த்தனை நடப்பதை வெளிப்படுத்தியவர்.
7) Karan Thapar – NDTVயின் ஆஸ்த்தான பேட்டிகளை எடுக்கும் ஒரு சிறந்த ஊடகவியலாளர் நாம் அனைவரும் அறிந்த வகையில் , 2002ம் ஆண்டின் குஜராத் முஸ்லிம் இனப்படுகைலைகளை பற்றி மோடியிடம் கேள்வியெழுப்பி மோடியை தண்ணிகுடிக்க வைத்தவர். கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் மோடியை எழுந்து ஓடச்சென்றவர். அதன் பிறகு பல ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் மற்றும் பாஜகவினரை கேள்விகளால் துளைத்து எழுந்து ஓட வைத்தவர். பிபிசிக்கு சிறப்பு பணி செய்யும் இவரிடம் பேட்டி கொடுத்துவிட்டு மறைந்த தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா மைக்கை கழற்றி டேபிளில் வீசிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
6) Pranay Rai – இவரைப்பற்றி அறியாதோர் யாருமிருக்க முடியாது. இவருக்கு கம்யூனிஸ்ட் கைக்கூலி என்கிற பெயர் எப்போதும் உண்டு காரணம் இவர் திருமதி பிருந்தா காரத்தின் உறவினர் என்பதால். NDTVககாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார் என ஊழல் குற்றச்சாட்டு கூறி இவரது ஊடகப்பணிகளை முடக்க நினைத்த பாசிச வர்க்கத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்தவர். கேள்வி பதில் என வந்துவிட்டால் ஈவு இறக்கமே பார்க்கமாட்டார் மனிதர், காரணம் எல்லா மனிதரும் சர்ச்சைக்குட்பட்டவரே ஆனால் தன்னை நேர்மையாளர் என நிரூபிக்க ஒரு நேர்மையாளனுக்கு மட்டுமே இயலும் என்பவர்.
5) Barkha Dutt – ஊடகப்பிரிவினரிடையே லேடி லயன் என பெயர் வாங்கிய பெண்மணி இவர். NDTV, Aaj Tak, BBC, CNC போன்ற ஊடகங்களில் அறச்சீற்றத்துடன் பணியாற்றிய ஒரு வங்கத்து பெண்மணி. இவரை குறித்து பிரதமர் மோடியே ஒரு பேட்டியில் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சித்தது தான் ஹைலைட். சாதாரண ஊடகத்தில் பணிபுரியும் இவரை பார்த்து மோடி பயந்தார் எனும்போதே இவரது கருத்தான பேச்சுக்கு மக்கள் மத்தியில் எத்தனை மதிப்புண்டு என்பதை அறியலாம்.
4) Amrita Rai — இது மற்றொரு வங்கத்துப்புயல், பாஜகவினர் இவரது பேட்டி என்றாலே , ஸ்டூடியோவிற்கு வருவதற்கு பயப்படுவார்களாம், பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை பற்றி அதிக விவாதம் நடத்தும் இவர் தனிப்பட்ட முறையில் கத்துவா சிறுமி ஆசிபாவிற்காக தொடர்ந்து ஒரு மாதம் நிகழ்ச்சிகளை நடத்தி பிரச்சனையின் தீவிரத்தை நாடறியச்செய்தவர் எனலாம்,. பாஜக ஆட்சியின் பசுக்கொலை, மோப் லிஞ்சிங் மற்றும் நிர்பயா விவகாரங்களில் பாஜகவினரின் லட்சணத்தை தோலுரித்தவர். இன்னும் கூட பதில் சொல்ல பயந்துகொண்டு இவரை யாரும் எதிர்கொள்வதில்லை.
3) Kumar ketkar – இவரை இரண்டாவது பிரனாய் ராய் எனலாம். ஆர்எஸ்எஸ் சிந்தாத்தங்களுக்கும் இந்துத்துவ அடக்குமுறைகளுக்கும் நான் ஒரு பகிரங்க விரோதி என அறிவித்துக்கொண்டவர் எனலாம். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவாவினர் நிகழ்த்தும் ஒவ்வொரு அரசியல் பழிவாங்கல் மற்றும் சமூக கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க தயங்காதவர். எப்போதும் சிறுபான்மையினர் மீது ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் வன்முறையை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர். தன்னை போல ஊடகப்பணியில் இருந்து கொண்டு நடுநிலை போர்வைக்குள் ஒளிந்துகொண்டு உண்மையான தரவுகளை பகிராமல் போலி வேசம் போட்டு விவாதம் என்கிற பெயரில் சர்க்கஸ் நடத்தும் கூலிக்கு மாரடிக்கும் அர்னாப், சௌத்ரி போன்றோரையும் இடையிடையில் குத்திக்கிழிப்பவர்.
2) Nidhi Razdhan — இவரை இரண்டாவது பர்கா தத் எனலாம், அந்தளவுக்கு ஆக்கிரோஷமான ஒரு பெண்மணி. பாஜகவினரின் ஒவ்வொரு சூதினையும் அது நடப்பதற்கு முன்பே ஊடகம் வாயிலாக முன்கூட்டியே கற்பித்துவிடுபவர். குறிப்பாக முஸ்லிம்களுக்கு நிகழும் ஒடுக்குமுறையை எதிர்த்து எப்போதும் குரலெழுப்ப தவறாதவர். முன்பு சரித்திர நிகழ்ச்சிகள் சம்பந்தமான விளம்பரதார நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் போது இந்திய சமூகத்திற்கு முஸ்லிம் மன்னர்களும் சாமான்ய முஸ்லிம்களும் விட்டுக்கொடுத்தது என்ன? இந்திய தேசிய சமூக கட்டமைப்பிற்காக முஸ்லிம்களால் விளைந்த நன்மைகள் என்ன? என்பதை தாம் தெளிவாக அறிந்து கொண்டதாகவும் ஆனால் பாடப்புத்தகங்கள் வாயிலாகவும் சினிமா மற்றும் காட்சி ஊடகத்தின் வாயிலாக அவை எந்தளவுக்கு களங்கப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக ஆதாரங்களோடு கூறுபவர். இந்தியாவில் நடக்கும் பாஜக அரசின் அவலங்களை லண்டன் ரிப்போர்ட்டர் பேரி காடிங்கர் வாயிலாக இங்கிலாந்து ஊடகங்களில் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருப்பவர்.
1) Raveesh Kumar — இவரை பற்றி நாம் அதிகம் கூற தேவையில்லை. முகநூலில் ஒருவருக்கு அதிகளவு போலி பக்கங்கள் உள்ளதெனில் அது இந்த ஒரு ஊடகவியலாளருக்காகத்தான் இருக்க முடியும், அந்தளவிற்கு இவர் கூறினால் அதெ 101% உண்மை என நம்பும் மக்களின் பூரண நம்பிக்கையை பெற்ற இந்தியாவின் நம்பர் ஒன் ஊடகவியலாளர். ஆனால் பாஜகவினரின் ஊடகப்பிரிவு சார்பாக இவரது்பெயரில் மாநிலத்திற்கு 100 கணக்குகள் தொடங்கப்பட்டு பாஜக அரசு செய்யும் ஒவ்வொன்றையும் இவர் ஆதரிப்பது்போல போலியான பதிவுகளை போட்டு மக்களை நம்ப வைப்பார்கள்.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இவரது போலி கணக்குகளில் இருந்து இவர் மோடிக்கு ஆதரவாக பேசுவது வீடியோக்களும் கட்டுரைகளும் அதிகம் பகிரப்பட்ட போது உடனடியாக தொலைக்காட்சியில் தோன்றி…மோடி பற்றிய தனது கருத்து எப்போதும் ஒன்று தான். An Unfit Premiere என்பது தான் மோடிக்கு தாம் கொடுக்கும் மரியாதை என்றும் , பத்திரிகை தர்மத்தை குழிதோண்டி புதைத்து வைத்திருக்கும் மோடி அரசுக்கும் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கி கூலிக்கு கூவ வைத்திருக்கும் மோடிக்கும் நான் எப்போதும் ஆதரவளிக்கமாட்டேன் , எனவே எனது பெயரிலுள்ள அனைத்து முகநூல் மற்றும் ட்விட்டர் ஐடிக்களும் போலியானவை அவை பாஜகவினருக்கு ஊடகப்பிரிவு நடத்தும் நேர்மையற்ற மனிதர்களால் நடத்தப்படுபவை அவற்றை நம்ப வேண்டாம் என்றும்…, எனது சக ஊடகப்பணியாளரான கவுரி லங்கேஷின் கொலையை நினைத்துப்பார்க்கும் ஒவ்வொரு ஊடகவிலாளரும் மோடியை எதிர்க்கவே செய்வார் என ஒரேயடியாக போட்டார் பாருங்கள்… அங்கே நிரூபணமானது அவரது ஆண்மை.
ஆக்கம் : நஸ்ரத்