Crimes Against Women Rape Uttar Pradesh

உபி உன்னாவ் வழக்கு: பார்ப்பனீயம் ஏன் சம்பந்த படுத்தப்படுகிறது ?

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது, இந்த முறையும் கற்பழிப்பு வழக்கு தொடர்பகத்தான். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது தந்தையை கொலை செய்தது தொடர்பான செய்திகள் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள், உன்னாவ்வில் மீண்டும் ஒர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கொடூர சம்பவம் அரங்கேறியுளளது.

கடந்த வியாழக்கிழமை கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயதான இளம் பெண் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். வழக்கு தொடர்பாக ராய் பரேலியில் உள்ள நீதிமன்றம் செல்லும் வழியில் தான் இந்த கொடூர சம்பவம் அரேங்கேறியுள்ளது.

உடல் முழுக்க தீ பற்றிய நிலையில் உதவியை எதிர்பார்த்து அவர் 1 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார். வழியில் ஒருவரை கண்டு அவரிடம் தொலைபேசி வாங்கி அவரே போலீசாருக்கு போன் செய்துள்ளார்.அதன் பிறகே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் ..

நான் வாழ விரும்புகிறேன். மரணிக்க விரும்பவில்லை. நான் உயிர் பிழைப்பேனா ? என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தப்பிவிட கூடாது நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏன் பார்பனீயத்துடன் சம்பந்தப்படுத்த படுகிறது?

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இருவர், சிவம் திரிவேதி மற்றும் அவரது உறவினர் சுபம் திரிவேதி. மீதமுள்ள ஹரிஷங்கர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் மற்றும் சிவாமின் தந்தை ராம் கிஷோர் திரிவேதி ஆகிய அனைவரும் பிராமணர்கள்.

குற்றம் சாட்டப்பட்ட 5 கயவர்கள்.

காதலித்து ஏமாற்றி, திருமண ஆசை காட்டிய சிவம் ஒரு மாதத்திற்கு மேலாக பல நகரங்களுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று ஒன்றாக நேரத்தை செலவிட்டுள்ளான். திருமணம் செய்து கொள்ளும்படி அவர் கேட்டபோது, அவரை ஏமாற்றும் விதமாக யாருக்கும் தெரியாமல் நோட்டரி கையெழுத்திட்ட ரூ .50 மதிப்பிலான பத்திரத் தாளில் திருமணம் செய்து கொண்டுள்ளான். எனினும் பகிரங்கமாக அனைவரை போலவும் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த பெண் கோரிக்கை வைத்தார்.

சிவம் ஒரு பிராமணர், பாதிக்கப்பட்ட பெண் லோஹர் எனும் கீழ்ஜாதியாக கருதப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளான். இது குறித்து அந்த பெண் வீட்டின் குடும்பத்தார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி உன்னை கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளான்.

பின்னர் தனது உறவினர் சுபம் என்ற ஒருவனையும் அழைத்து வந்து அந்த பெண்ணுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது தொடர்பாக கடந்த மார்ச் 4 ம் தேதி பதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் எனினும் கடந்த நவம்பர் 30 ம் தேதி பெயிலில் வெளிவந்த இரு கயவர்களும் தொடர்ந்து அந்த பெண்ணிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளனர். அந்த பெண் மறுக்கவே, திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடல் முழுக்க தீ காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் இந்த ஐவர் பெயரை குறிப்பிட்டதன் அடிப்படையில் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். எனினும் அவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ட்விட்டரில் #UnnaoHangBrahminRapists (பார்ப்பன பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடு) ஏன் ட்ரெண்ட் ஆகிறது?

குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனர்கள். எனவே தான் அவர்களது புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களிலோ, ஊடகங்ககளிலோ பெரிதாக வெளியிடப்படவில்லை. மேலும் பெண் தாழ்ந்த சாதி, திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவனோ பிராமண சமுகத்தை சேர்ந்தவன் எனவே இதற்கு பார்ப்பனிய ஆதிக்க மன நிலை தான் இதற்கு காரணம் என்று கருத்து பட பலர் ட்வீட் செய்தமையால் ட்விட்டரில் #UnnaoHangBrahminRapists என்ற ஹாஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

https://twitter.com/deepsealioness/status/1203215814586859520