பீகாரில் நடைபெற்ற நீதித்துறை சேவைகளுக்காக நடைபெற்ற தேர்வில் 22 முஸ்லிம் இளைஞர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 7 பெண் முஸ்லிம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்திய நீதித்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இத்தகைய வெற்றி என்பது மகிழ்ச்சியானதென மூத்த வழக்கறிஞர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மேலும் சனம் ஹயாத் என்ற மாணவி முதல் பத்து இடங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக உ.பி யில் நடைபெற்ற தேர்வில் 18 பெண்கள் உட்பட 38 முஸ்லிம் நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டனர். சமீபத்தில் இராஜஸ்தானில் 6 முஸ்லிம்களில் 5 பெண்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதித்துறையில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் வரவேற்க தகுந்த ஒன்று என சமூக வளைதளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன.