நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த நவ.09 அன்று கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த அபலை சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொடுக்குமாறு “இலக்கு 2040 ” அமைப்பின் நிறுவனர் ஆசிரியை சபரிமாலா அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., வை பள்ளப்பட்டியில் சந்தித்து மனு கொடுத்தார்.
இது தொடர்பாக மாவட்ட அமைச்சர் திரு.O.S. மணியன் அவர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசி உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக பொதுச் செயலாளர் வாக்களித்தார்.
அந்த பெற்றோரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
கல்வி உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் விழிப்புணர்வுக்காக ஆசிரியை பதவியை துறந்து விட்டு தியாகப்பூர்வமாக செயல்படுவதற்காக ஆசிரியை சபரிமாலாவை பொதுச் செயலாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.