பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. ஹேமா மாலினி தனது தொகுதியான மதுராவில் நிலவும் ‘குரங்கு அச்சுறுத்தல்’ குறித்து நேற்று (20-11-19) மக்களவையில் பேசினார். “உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள்” நடைபெற்று வருவது குறித்து கவலை தெரிவித்த ஹேமா மாலினி, விலங்குகளை கருத்தடை செய்வதற்கான முயற்சிகள் அவற்றை “மிகவும் வன்முறையாக” மாற்றி விட்டன என்று தெரிவித்தார்.
“தயவுசெய்து இந்த விஷயத்தை லேசாக எடுத்து கொள்ள வேண்டாம். இது மிகவும் மிக முக்கியமான விஷயம்” என்று மேலும் அவர் தெரிவித்தார். அங்குள்ள மக்கள் குரங்குகளை தெய்வமாக வழிபடுவதால் குரங்குகள் விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.