ஐஐடி மெட்ராஸில் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃபிற்கு ஆதரவாக ஹைதரபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு..
ஐஐடி மெட்ராஸில் பாத்திமா லத்தீஃப் நிறுவனப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன் தனது மானுடவியல் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
2014 ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதே போன்றுதான் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதனால் ஹைதரபாத் மத்திய பல்கலைகழகத்தில் ரோஹித் வெமுலா நிறுவனப் படுகொலை செய்யப்பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து உயர்கல்வியை நோக்கி வரக்கூடிய தலித் , சிறுபான்மையினர் மாணவர்களின் தற்கொலை விடயங்களில் மத்திய அரசு தொடர்ச்சியான அலட்சியத்தை கடைபிடிக்கிறது.
“பேட்டி பச்சாவ்.., பேட்டி பத்தாவ்” என்று பிரதமர் மோடி முழங்குவார் ஆனால் இதுபோன்ற நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட தலித் ,சிறுபான்மையினர் மாணவிகள் பற்றி அவருக்கு எந்த கரிசனமும் இல்லை. இவை வெறும் வெற்றுச் சொல் மாத்திரமே.
ஒடுக்கப்பட்ட தலித், சிறுபான்மையினர் மாணவர்களின் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் நிறுவனப் படுகொலைக்கு எதிராக அரசு சட்டமியற்றி சாதி, மத பாகுபாடுகளிலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். “
-நரேஷ் சக்கரவர்த்தி,
மாநிலத் தலைவர்,
தலித்- சிறுபான்மையினர் மாணவர் அமைப்பு (DMSA),
உஸ்மானியா பல்கலைக்கழகம்.
#JusticeForFathimaLatheef
#FathimaLathif
#IITmadrasKilledFathima
#ArrestSudharsanPadmanaban
#JusticeForFathima