சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ‘பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டவர்களை ” அடையாளம் காணத் தொடங்குமாரு உ.பி. மாநில டி.ஜி.பி கட்டளை பிறப்பித்துள்ளார்.
அஸ்ஸாமை தொடர்ந்து உபியில் ( தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி அமல் படுத்தும் முகமாக டி.ஜி.பி தலைமையகம் பிரத்யேகமாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் மற்றும் சேரி பகுதிகள் ஆகியவற்றில் புதிய குடியிருப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏழை மக்கள், தின கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகள் போன்றோரே வாழ்ந்து வருகின்றனர்.இந்த நடவடிக்கையானது சிறுபான்மை மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களை குறிவைத்தே எடுக்கப்படுகிறது என்று கண்டனம் எழுந்துள்ளது.
உபியின் லக்னோ பகுதிகளில் 737 க்கும் மேற்பட்ட சேரி பகுதிகள் உள்ளன, இதில் கிட்டத்தட்ட 12,000 மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 45% பேர் சேரிகளில் வாழ்கின்றனர்.