மெட்ராஸ் கஃபே, பட்லா ஹவுஸ் போன்ற ‘தேசியவாத’ திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் ஜான் ஆபிரகாம். இவர் சமீபத்தில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முரளி கே மேனனின் நாவல் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவரிடம் “உங்கள் சொந்த மாநிலமான கேரளா ஏன் இன்னும் ‘மோடி-ஃபைட்’ ஆகாமல் உள்ளது? கேரளா மக்களுக்கும் பிற மக்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு தான் என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்க்கு பதில் அளித்த அவர் கேரளாவில், அனைத்து மத சமூகத்தவரும் அமைதியாகவும், ஒற்றுமையாக வாழமுடிகிறது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர் “இது தான் கேரளத்தின் அழகே ! இதை மிகவும் அருமையான ஒன்றாக நான் கருதுகிறேன்!… இங்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் 10 மீட்டர் இடைவெளிக்குள் கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் இயங்க முடிவதை நீங்கள் காண முடியும். மக்கள் அமைதியாக இணைந்து வாழ்கிறார்கள்.இங்கு முற்றிலுமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை .”என்று கூறினார்.