நேற்று கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கேள்வி ஒன்றிற்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் பேசிய நிர்மலா சீதாராமன் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து ‘அடி போடி’ என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பு கோவாவில் நடைபெற்றதால் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டன. அங்கே இருந்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து உள்ளது. எனவே தான் மத்திய நிதி அமைச்சர் அவர்கள் விளங்கி கொள்ளாத தமிழ் மொழியில் ” அடி போடி”என்று சலித்து கொண்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நாட்டின் மிக பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு முறையாக பதில் அளிக்கப்பட வேண்டிய மேடையில் இப்படி சொல்வது திமிர் பேச்சு என்று ஒருவர் கருத்து பதிந்துள்ளார்