‘நம் நாட்டில் அனைவருக்கும் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாதது துரதிஷ்டவசமானது.‘-ரஜினி!
அமித் ஷா இந்தி திணிப்பு குறித்த தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது கருத்துகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரிடம் இந்தி திணிப்பு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர் . அதற்கு, “எந்தவொரு நாட்டிற்க்கும் பொதுவான மொழி இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் நல்லது.எனினும் துரதிஷ்ட வசமாக நம் நாட்டில் அனைவருக்கும் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.” என்று அமித் ஷா கருத்திற்கு ஆதரவு தரும் விதத்தில் பேசினார்..
எனினும் தொடர்ந்து பேசிய அவர் ..” இந்தி மட்டுமல்ல, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தியை திணித்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும், வட நாட்டின் பல மாநிலங்களிலும் கூட இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டர்கள்” என்று தமிழக மக்கள் பக்கம் நிற்பது போல காட்டும் விதத்தில் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக மக்கள் #சங்கிரஜினி என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில் ‘வேணும் ஆனா வேணாம்’ என்ற பாணியில் ரஜினி பேசியிருப்பபது குறித்து நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.