யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சக்கட்டத்தில் உள்ளது என்று நெட்டிசன்கள் பரவலாக கருத்து தெரிவித்து வரும் வேலையில் உபியில் முஸ்லிம் மாணவிகளின் உரிமையை பறிக்கும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் புர்கா அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . இதனை கல்லூரி நிர்வாகம் தான்தோன்றி தனமாக தடாலடி அறிவிப்பாக செய்துள்ளது. இதனை அறியாத அப்பாவி மாணவிகள் வழக்கம் போல் புர்கா அணிந்து கல்லூரிக்கு வர, கல்லூரி முதல்வர் மாணவ சிறுமிகளை உள்ளே அனுமதிக்காது கையில் பிரம்பை கொண்டு மாணவிகளை துரத்தி தாக்க முற்பட்டது தான் அராஜகத்தின் உச்சம். இவை அனைத்தும் வீடியோவிலும் பதிவாகியுள்ளது.
மாணவிகள் இத்தனை வருடங்களாக உடுத்தி வந்த ஹிஜாப்/புர்கா போன்ற கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது என்று தெரிவித்துள்ளது எஸ்.ஆர்.கே கல்லூரி நிர்வாகம்.
காட்டுகிறது.
இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா ? புர்கா பெண் அடிமைத்தனம் தானே ? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அறிந்திட..
சமீபத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த தடை நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாட்டை அமைத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“இது சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய பெண் மாணவர்களை அவமதிக்கும் செயலாகும் . குறைந்தபட்சம் ஹிஜாப்பில் வந்திருந்த பெண் மாணவர்களை கல்லூரிக்குள் நுழைய அனுமதித்து , அவர்கள் ஹிஜாபை அகற்றி கொண்டு வகுப்பறைகளுக்குச் செல்ல ஏதேனும் ஒரு இடத்தை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதனால் தங்கள் வீடுகளுக்குச் செல்லும் முன்னரும் கூட மீண்டும் ஹிஜாப் அணிந்து கொண்டு செல்ல முடிந்திருக்கும்.. கல்லூரி உடையில் வராதவர்களை திருப்பி அனுப்பலாம். ஆனால் அவர்கள் கல்லூரி சீருடையில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தாமல் ஹிஜாப் அணிந்த மாணவ சிறுமிகளை கல்லூரி முதல்வர் கையில் பிரம்பை வைத்து கொண்டு கல்லூரியில் இருந்து விரட்டி அடிப்பது முறையல்ல”என்று உள்ளூர்வாசி காசி இஷாக் கோரா செய்தி வலைத்தளமான ‘இந்தியா டுமாரோ‘ விடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் முன்பு உள்ளூர் பஸ் ஸ்டாண்டில் முஸ்லிம் மாணவ சிறுமிகள் தங்கள் ஹிஜாபை அகற்றி விட்டு வர வேண்டும் என்று சொல்வதர்காக கல்லூரி வாசலில் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி சீருடையில் தான் மாணவ மாணவிகள் வர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. .சொந்த கல்லூரி மாணவிகளாக இருந்தாலும்.. கல்லூரியினுள் கூட ஆடை மாற்றம் செய்ய அனுமதிக்காமல் விரட்டி அடிப்பதை தான் நாம் கண்டிக்கிறோம்.