இறுதி பாகம் ..
உங்களின் இந்த உண்மை கண்டறியும் பணியில் .. காஷ்மீர் மக்கள் எப்படி நடந்து கொண்டனர்?
எங்களுக்கு மிகவும் அன்பான ஒரு வரவேற்பு கிடைத்தது அவர்கள் எங்களிடம் எந்த அளவிற்கு அன்பையும் விருந்தோம்பலும் காட்டினார்கள் என்று வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இது எங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது.
இந்தியா மற்றும் இந்தியர்களிடம் கோவமாக இருக்க அனைத்து உரிமையும் படைத்தவர்கள் இப்படிப்பட்ட மோசமான நிலையில் யாரை புதிதாக கண்டாலும் சந்தேகிப்பது இயற்கைதான். அதனால் முதலில் எங்களிடம் நீங்கள் அரசு தரப்பா அல்லது ஊடகமா என்று கேட்பார்கள். மனித உரிமைப் போராளிகளால் எங்களுக்காக இதுவரை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. எங்களுக்காக டில்லியில் குரலை உயர்த்திடவும் இல்லை.
இப்படிப்பட்ட வார்த்தைகள் இருந்தாலும் அதே வேளையில் அவர்களிடமிருந்த மிகவும் குறைவான உணவிலும் கூட எங்களுக்கு சரியான வேளையில் டீ கிடைத்ததா? என்பது வரை உறுதி செய்வார்கள். கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு சென்று ஜூஸ் பாக்கெட்டுகளை எங்களுக்காக எடுத்து வ ருவார்கள். எங்களை வரவேற்று மதிய உணவை வழங்குவார்கள் நாங்கள் எங்கு சென்றாலும் மக்களின் அன்பு எங்களை சூழ்ந்து இருந்தது.
அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு பிற இந்திய மக்கள் மீது எந்த கோபமும் இல்லை. கோவம் எல்லாம் மோடி அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தான். நாங்கள் செய்த இந்த வேலை இந்திய மீடியாக்கள் செய்திருக்க வேண்டியது.ஆனால் இங்கு களத்தில் எவரையும் காண முடியவில்லை.
முன்னர் கேபிள் டிவி யில் அசையாமல் இருந்தது தற்போது வேலை செய்கிறதா?
தற்போது கேபிள் டிவி உள்ளது. ஆனால் உள்ளூர் கஷ்மீரி தொலைக்காட்சிகள் தெரிவதில்லை. தேசிய தொலைக்காட்சியான ‘நியூ டெல்லி’ போன்றவைகளை தான் காணமுடிகிறது. உள்ளூர் காஷ்மீரி பத்திரிக்கையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது அவர்கள் சில நாட்கள் பத்திரிகை பிரசுரித்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது 17 ஆம் தேதி வரை அலுவலங்கள் மூடியிருக்கும் நாங்கள் பிரிண்ட் செய்வதற்கு காண பேப்பர்கள் டெல்லியில் இருந்து தான் வரும் ஆனால் தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது எனினும் இந்நாள் வரை நாங்கள் மிகவும் கடினத்துடன் செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துக் கொண்டு இருந்தோம்.
அப்போதும் கூட ராணுவத்தினர் எங்களிடம் வந்து நீங்கள் ஏன் இன்னும் செயல்படுகிறீர்கள்? உங்களால் எப்படி பிரிண்ட் செய்ய முடிகிறது? உங்களுக்கு செய்திகள் எப்படி வந்தடைகின்றன? இணையதளம் இல்லாத நிலையில் உங்களால் எப்படி செய்திகளை சேகரிக்க இயலும் ? என்று கேட்பார்கள். ஒரு சில பத்திரிக்கையாளர்கள் மட்டும் இத்தனை தடைகள் இருந்தும் பத்திரிக்கைகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஆனால் உள்ளூர் தொலைக்காட்சிகள் பொருத்தவரை அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
அதிகமான தகவல்கள் ஸ்ரீ நகரை குறித்தே உள்ளது. மற்ற இடங்களெல்லாம் நிலைமை எப்படி உள்ளது?
மற்ற இடங்களில் நிலைமை அதைவிட மிகவும் மிகவும் மோசமானது. பெருநாள் அன்று மட்டும் சற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தி கொள்ளப்பட்டது. அதுவும் மிகவும், மிகவும் குறைந்த நேரம் மட்டுமே!. மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினர்.
ஆடுகள் விற்பனை முற்றிலுமாக இல்லாமல் போனது. ஒரு வருடமாக ஆடுகளை பராமரித்த பண்ணை வியாபாரிகளுக்கு மிகப்பெரும் நட்டமே மிஞ்சியது. மக்களிடத்தில் எதையும் வாங்க பொருளாதாரம் இல்லை.
கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமானது. நினைத்தவர்களை எல்லாம் கைது செய்வது.. சிறிய பெரிய என்று பாகுபாடின்றி எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும்… பிரமுகர்களாக இருந்தாலும்…கைது செய்வது. வாலிப வயதை அடைந்த இளைஞர்களை கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுவது . இதுதான் அங்குள்ள நிலைமை. இதை எங்களால் உறுதிபடக் கூறமுடியும்.
நீங்கள் சொல்வது கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் பற்றி?
ஆம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் தான். நாங்கள் சோபோர் மற்றும் பண்டிபோரா இன்னும் ஸ்ரீநகரிலிருந்து சோபோர் மற்றும் சோப்போரிலிருந்து பண்டி போரா பகுதிகளுக்கு இடையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றோம்.மேலும் நாங்கள் தெற்கு காஷ்மீர், அனந்த்நாக், சோபியான், பாம்போர் போன்ற பகுதிகளுக்கும் சென்றோம்.
எந்த விதமான தொலைத்தொடர்பு சாதனங்களும் இல்லாமல் உள்ளதே, மக்கள் இதனால் எந்த அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்? நீங்கள் அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
எதிர்கொள்வது மிகவும் கடுமையாக இருந்தது. இருட்டறை போன்று தோன்றியது. யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் போலீஸ் அதிகாரிகளை சுற்றி நீண்ட மக்கள் வரிசைகள் இருக்கும், எந்த ஒரு காவலரின் கைகளிலும் தொலைபேசி வைத்திருப்பதை கண்டு விட்டால் போதும், உடனே அவரை சுற்றி மக்கள் வெள்ளமே ஏற்படும். எப்படியாவது தங்கள் அன்பிற்குரியவர்களுடன் பேசிவிட ஏங்கியவர்களாக காத்துக்கிடப்பர்…காஷ்மீற்குள் தொலை தொடர்பு சாதனங்களே இல்லை.
ஸ்ரீநகரில் வசிக்கும் ஒருவர் தன் உறவினர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்தாலும் அவர்களின் நலன் விசாரிக்க /தொடர்பு கொள்ள முடியாது. அது மிகவும் மோசமான நிலைமை. ஒவ்வொரு ரோட்டிலும் காணுமிடமெல்லாம் சோதனை சாவடிகள்.. துணை ராணுவ படையினர் .. மனம்விட்டு சொல்கிறேன்.. காஷ்மீர் காண்பதற்கு ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் , பாலஸ்தீன நிலங்களை போன்று தோன்றியது. காஷ்மீரில் வளர்ச்சி பற்றாக்குறை இல்லை, ஜனநாயக பற்றாக்குறை தான் உள்ளது.
இது எப்போது முடிவிற்கு வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் ?
இது ஒரு முடிவிற்கு வரும் என்று மக்கள் நம்புவதாக தெரியவில்லை, இனி நம் வாழ்வே இப்படி தான் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள், எனினும் ஓர் அளவிற்காவது கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையுமுள்ளது.
அவர்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகிறதா? என்ன நிலைமை ?
9 ஆம் ஆகஸ்ட் வரை பால் கூட கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கு கூட பால் கிடைக்கவில்லை, மிக பெரிய பற்றாக்குறை நிலவியது. எனினும் 10 ஆம் தேதி ஓர் அளவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்கி சேமித்து கொண்டனர். எந்த ஒன்றிற்கும் உறுதி இல்லை.. அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருந்தது. சில மணி துளிகள் மட்டும் திறப்பார்கள்.
ஒரு சில ஏடிஎம் கல் திறந்திருந்தன.. ஆனால் பிரச்சனை என்னவென்றால் மக்களுக்கு வேலை இல்லை எனவே அவர்களிடம் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள பணமும் இல்லை,.. இதே நிலை தான் பிஹார் ,உபி போன்ற பிற மாநிலங்களில் இருந்து இங்கு பிழைப்பு தேடி வந்தவர்களுக்கும். அவர்கள் எங்களுக்கு தெரிவித்ததின் படி காஷ்மீரில் வேறு எந்த மாநிலத்தையும் விட ஒரு நாளைக்கு 600, 700, 800 ரூபாய் வரை சம்பாதிபர்களாம்…இது பிற மாநிலங்களை விட அதிகமான தொகை.
மருத்துவமனைகளில் நிலைமை எப்படி உள்ளது ?
பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களின் நிலைமை மிகவும் மோசமானது. பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட இருவரை நாங்கள் கண்டோம்.. அதை எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை – மிக மிக கொடுமையாக இருந்தது . காயங்கள் ஆழமானவை. அவர்களின் கண்பார்வை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . அவர்களின் முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளின் காயங்கள் நிறைந்து இருந்தது.
பெற்றோர் மருத்துவமனைகளுக்கு செல்லவும் முடியாது. பெரிய மருத்துவமனைகள் எங்களிடம் தேவையான மருந்து மாத்திரை உள்ளது என்று தெரிவிக்கின்றன. ஆனால் ஊரடங்கு உத்தரவின் கடுமையால் மக்கள் எங்கும் நடமாட முடிவதில்லை.
இன்றைக்கு ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோ ஓட்டுனரை சந்தித்தோம் .. ஆஸ்பிலின் மற்றும் சல்பூட்டமால் (மருந்து) ஆகியவற்றின் கடைசி டோஸில் இருக்கிறார்.. இன்றைக்கு மட்டுமே மருந்து உட்கொள்ள முடியும்.அவர் மருந்து வாங்க எங்கெங்கோ அலைகிறார் . ஆனால் எந்த ஒரு மருந்து கடையும் திறந்து இல்லை. திறந்திருந்த ஒரு சில மருந்து கடைகளில் ஸ்டாக் இல்லை. சில மருத்துவமனைகளில் மருந்துகள் இருக்கும் என்று அவருக்கு தெரியும் ஆனால் அவரால் அங்கு செல்ல முடியாது. அங்கும் இங்கும் நடமாடிட தான் முடியாதே.!
இதில் மிக மோசமான ஒரு விஷயம் என்னவென்றால் உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்படுத்தும் பெல்லட் குண்டுகளினால் தாக்கப்பட்டவர்கள் முடிந்தவரை அரசு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்… ஏனெனில் போலீசார் இப்படிப்பட்டவர்களை தான் தேடி வந்து புது வழக்குகளை இவர்களின் மீது பதிவு செய்து விடுகின்றனர்.
எனவே பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட கொடுமை ஒரு புறமிருக்க , வாழ்நாள் முழுக்க காவல் துறையினரின் வழக்குகளையும் சுமக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகின்றனர்.
சுமக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகின்றனர்.
தொடர் முற்றும்…
பாகம் 1:
காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்கம் படுத்தபடும் பெண்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.
http://bit.ly/33APlBS
பாகம் -2
காஷ்மீர்! – ‘பெருநாள் தினத்தில் கூட புத்தாடை இல்லாமல் சிறுவர்கள்’-காஷ்மீரின் களநிலவரம் –திருமதி கவிதா கிருஷ்ணன்..
http://bit.ly/2Z6R3r5