Islamophobia

முஸ்லிம் உணவு கொண்டு வருவதால் உணவை கேன்சல் செய்த மோடி ஆதரவாளர்-சோமேடோ நிறுவனம் “பளார்” பதிலடி!

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா, கடுமையான மோடி ஆதரவாளர். இவர் தனது ட்விட்டர் யூசர் நேமாக வைத்துள்ளதும் @NaMo_SARKAAR என்பது தான். மேலும் இவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மட்டுமே பல்வேறு பதிவுகள் உள்ளன, அதிலும் பெரும்பான்மை பொய் (fake news ) செய்திகளாக உள்ளன.
உதாரணமாக ..

உதாரணமாக இவரின் இந்த ட்வீட்.

இதில் உண்மை செய்திகளை பொய் என்று மறுத்து பதிவு செய்துள்ளார்.

குறிப்பு : தற்போது இவர் தன் ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார் எனவே மேலுள்ள லிங்க் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நடந்த சம்பவம்:

ஷுக்லா தனது செல்போனில் உள்ள zomato ஆப் மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளளார். அவர் ஆர்டர் செய்த உணவை கடையில் இருந்து எடுத்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து டெலிவரி செய்ய ஒரு நபரை அந்நிறுவனம் நியமித்து அந்த தகவலை அமித் சுக்லாவிற்கு அனுப்பியது.

டெலிவரி செய்ய நியமிக்கப்பட்ட நபர் முஸ்லிம் என்பதை அவரது பெயரின் மூலம் தெரிந்து கொண்ட அமித் தனக்கு உணவு கொண்டு வருபவர் இந்து இல்லை என்பதால் அவரை மாற்றி ஒரு இந்துவிற்கு இந்த ஆர்டரை கொண்டு வர நியமிக்க வேண்டும் என அவர் சோமாட்டோ நிறுவனத்தை கேட்டு கொண்டார்..

https://twitter.com/ZomatoIN/status/1156429449258250240

ஆனால் அந்நிறுவனத்தின் பதிலில், “உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்” என கூறி அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதில் பலரை கவர்ந்துவிட்டது. இதனை தொடர்ந்து zomato நிறுவனத்திற்கு ஆதரவாக பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். தற்போது இது இந்திய அளவில் முதலாவதாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பெண்களின் மார்பு குறித்து பச்சையாக அருவருக்க தக்க முறையில் இவர் கருத்திட்டதும் தற்போது வைரலாகி வருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சை விதைப்பதில் வல்லவரானவர் தஸ்லீமா நஸ் ரீன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

அதே சமயம் இவர் தற்போது மோடி ஆதரவு சேனலாக அறியப்படும் ரிபப்லிக் தொலைகாட்சியில் தோன்றி பிரபலம் அடையும் யுக்தியில் இறங்கியுள்ளார்.