குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு குழந்தைகளின் கல்வி செலவுக்காக அரசாங்கத்திடம் செலவழிக்க சொல்கிறீர்களா என உபி பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கு உதவிட வேண்டும் என பெண்கள் அவ்ரையா பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் திவாகரை அணுகியபோது தான் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தொகுதியில் மக்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
“பச்சே ஆப் பேடா கரோ அவுர் ரூபியா ஹம் தே” (நீங்கள் குழந்தைகளை உற்பத்தி பெற்றெடுத்துவிட்டு, பணத்தை எங்களிடம் கேட்கிறீர்கள்)” என்று பாஜக எம்எல்ஏ பெண்களிடம் கூறியுள்ளார்.பெண்களால் சூழப்பட்ட எம்.எல்.ஏ மேலும் கூறுகையில், “அரசுப் பள்ளிகள் எதற்காக உள்ளன? அங்கே கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.” என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ம இதற்கு பதிலளிக்கும் முகமாக எம்.எல்.ஏ. தாங்கள் இப்போது இருக்க காரணம் பொதுமக்கள் தேர்வு செய்தது தான் என்று அவருக்கு நினைவுப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சமீர் சிங், “இந்த பிரச்சினை பற்றி எனக்குத் தெரியாது, மாநிலத் தலைமைக்கும் தெரியாது. ஆனால் பெண்களிடம் இழிவான முறையில் பேச யாருக்கும் உரிமை இல்லை” என்றார். மேலும் “பாஜக தான் ‘சர்வ் சமாஜை’ மதிக்கும் கட்சி. இது குறித்து ஏதேனும் புகார் வந்தால், இந்த விவகாரம் விசாரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.
“பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது, இதுவே பாஜகவின் தன்மை” என்று அவர் கூறினார்.
பாஜகவும் அதன் மக்களும் யாருக்கும் உதவுவதில்லை, பெண்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று சவுத்ரி மேலும் கூறினார்.
எனினும் வட இந்திய தொலைக்காட்சி மீடியாக்கள் இதை பெரிதுப்படுத்தாததால் இது பெரிய அளவில் ஒரு சர்ச்சை ஆகிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.