தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை நீக்க முடியும் என்று உ.பி. முதல்வர் அஜய் பிஷ்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
உபி யில் உள்ள ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவைத் துவக்கி வைத்து பேசிய அஜய் பிஷ்த், யோகா மூலம் உடலை ‘ஃபிட்டாக’ வைத்துள்ளவர்கள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை என பேசியுள்ளார்.
“யோகாவுக்குள் மிகப்பெரிய விஷயங்கள் அடங்கியுள்ளன. எனவே இந்திய பாரம்பரியத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். மன நோய் மற்றும் உடல் ரீதியிலான நோய்களுக்கு எதிராக இந்த உலகம் தொடர்ந்து போராடி வருகிறது. இவை குணப்படுத்தப்பட்டால், யாரும் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு அல்லது கொரோனா வைரஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட மாட்டார்கள் ” என்று உபி முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.