Human Rights

இன்று ‘உலக மனித உரிமை தின’மாம், யாரை ஏமாற்ற ?!

இன்று Dec 10 உலக மனித உரிமை தினம்:

உலகில் எங்குமே மனித உரிமைகள் பாதுகாக்கப்படாத இத்தருணத்தில் இத்தினத்தை நினைவு கூர்ந்து ஐநா அனுஷ்டிப்பது கேளிக்கூத்தும் கண்துடைப்புமாகும்.

உலகெங்கிலும் உள்ள எல்லா பகுதிகளிலும் எங்கோ ஓரிடத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டேதானிருக்கின்றன… தனிமனித உரிமைகளையும், ஒரு சமுதாயத்தின் உரிமைகளையும் மதிக்காமல் அவர்களது மானத்திற்கும் உயிர்களுக்கும் ஊறுவிளைவிக்கும் சம்பவங்கள் ஆதிக்கவர்க்கத்தாலும் அதிகார வர்க்கத்தாலும் நடத்துப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளைவிட அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஆங்சான் சூகியின் தேசமான பர்மாவில் முஸ்லிம்கள் உயிரோடு கொளுத்தப்படுகின்றனர், ஆண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கழுத்தில் சங்கிலி பிணைத்து கரடூமுரடான பாதைகளில் நாய்களெப்போல இழுத்துச்செல்லப்பட்டு கொள்ளப்படுகின்றனர்.

Moroccan cartoonist Naji Benaji criticizes Aung San Suu Kyi’s silence.

ஆனாலும் ஆங்சாங் சூகி தமது முஸ்லிம் வெருப்பின் பிண்ணனிக்கான காரணங்களை விளக்கிக்கொண்டுள்ளார். மனித உரிமை மீறல் செய்துவிட்டு அதனை ஞாயப்படுத்தி கருத்து தெரிவிக்கும் வகையில் உள்ளது ஒரு பௌத்த நாடு.

பெண்கள் கற்பழிக்கப்பட்டு அவர்களது பிறப்புறுப்புகள் அறுக்கப்பட்டு கொல்லப்படூகின்றனர், வழிபாட்டுத்தளமான பள்ளிவாயில்கள் அடித்து நொறுக்கப்படூகின்றன.
பச்சிளங்குழந்தைகளுக்கும் சிறார் சிறுமியருக்கும் சிமென்ட் பாலை குடிக்க வைத்து தலையில் ஆணி அறைந்து கொல்லப்படூகிறார்கள்… இவை எல்லாம் நிகழ்த்துவது உலகிற்கே அமைதியை போதித்த புத்தமகானின் பிக்குகள் மற்றும் அவர்களது சீடர்களும். இதனை தட்டிக்கேட்போர் யாருமில்லை…

பலமுறை பல காணோளி மூலம் உலகின் பார்வைக்கு வந்தும் ஐநாவிடம் அதற்கான பலனில்லை..இந்த லட்சணத்தில் எதைக்கொண்டு இத்தினத்தை உலக மனித உரிமை தினமாக நாம் அனுஷ்டிப்பது.. பர்மா என இங்கே நாம் கூறியது ஒரு ஒப்புக்குத்தான் , இன்னும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அரசியல் உள்ளீடுகளால் சிறுபான்மையினர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் என்பது போல சாதி,இன அடிப்படையில் ஒருவரை எப்படியெல்லாம் துன்புறுத்துவது என மனுஸ்மிரிதி எழுதி வைத்திருக்கிறார்கள், அதனை அன்றாடம் ஓதி ஓதி மனப்பாடம் செய்கிறார்கள், தக்க சமயம் வரும்போது கூட்டுக்கொலை,பசுக்கொலை,பாலியல் படுகொலைகள், குழந்தைகள் மீதான அத்துமீறல் என இருக்கும் எல்லா வழிகளிலும் சகமனிதர் மீது வன்முறையை கட்டவிழ்த்து கொடூரமாக கொலை செய்கிறார்கள்.

நாம் வாழும் நாட்களிலே கஷ்மீரை காண்கிறோம், திறந்தவெளி சிறைச்சாலையாக, சாதாரண மாணவன் ஒருவன் இறங்கி தெருவில் நடக்கமுடியாத அடுக்குமுறை நிறைந்த பகுதியாக காண்கிறோம். கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்தால் கூட உரிய நேரத்திற்கு போய் மருத்துவமனையில் சேர முடியவில்லை. இதற்கு மேல் ஒரு மனித உரிமை மீறல் இருக்க முடியுமா?

மண்ணில் போராட வழியில்லாமல் ஒவ்வொரு நாளும் செத்துமடியும் அப்பாவி உயிர்களை எண்ணி துடித்திடவே இந்நாள் உருவாக்கப்பட்டுள்ளது!