கடந்த 2018 கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனக்கு ஓட்டு போடாததால் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் தடை செய்வேன் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ எம்.பி. ரேணுகாச்சார்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியுள்ளார்.
‘சப் க சாத் சப் க விகாஸ்’ – மோடி மந்திரம் :
எனினும் அமைச்சரின் இந்த ஆணவ பேச்சு மீடியா கவனத்தை பெற்றிடவில்லை. இவரின் முகத்திரை பெரிய அளவில் கிழிக்கப்படவும் இல்லை. ஒரு புறம் “சப் க சாத் சப் க விகாஸ்”.. ‘அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து அனைவரையம் முன்னேற்றுவோம்’ என்று மோடி சொல்லி கொண்டிருக்க அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ அவர் கட்சி எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா இப்படி எல்லாம் பேசுகிறார்.
முஸ்லிம்கள் வசதிகளை துண்டிப்பேன்:
கர்நாடகாவில், தனது தொகுதியில் குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றபின் உரை நிகழ்த்திய ரேணுகாச்சார்யா, 2018 ல் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்காததால் தனது ஹொன்னாலி தொகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கான அனைத்து வசதிகளையும் துண்டித்து விடுவேன் என்று கூறினார்.
பாஜக எம்எல்ஏ வின் புத்தி பேதலித்த பேச்சை கண்டித்த எதிர் கட்சியினர் அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து உடனடியாக நீக்கமாறு கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் இந்த கோரிக்கை செவிடன் காதில் சங்கு ஊதுன மாரி தான் என கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இது முதல் முறை அல்ல:
இவ்வாறு இவர் பேசுவது முதல் முறை அல்ல. சில தினங்களுக்கு முன்பு, முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்களை வைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். CAA சார்பு பேரணியில் உரையாற்றும் போது, இந்த “தேசவிரோதிகளுக்கு” ஒரு பாடம் கற்பிப்பிக்க போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
உறங்கும் பெரும்பான்மை மீடியாக்கள்:
ரேணுகாச்சார்யாவின் கருத்துக்கள் குறித்து முதல்வர் பி.எஸ்.யெடியூரப்பா அல்லது பாஜக தலைமையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம் வேறென்ன? உறங்கி கொண்டிருக்கும் பெரும்பாண்மை மீடியாக்கள் இவரின் பேச்சை மக்கள் மன்றம் வரை போய் சேர்த்திடவில்லை. இவ்வாறான பேச்சுக்களை அமபலப்படுத்தி , பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க வேண்டும் என்கின்றனர் சாமானிய மக்கள். எனினும் வெறுப்பு பேச்சுக்கள் சாதாரணமாக்க பட்டுவிட்டது புதிய இந்தியாவில்.