ஐஐடியில் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு காரணமான பேராசியர் சுதர்சன் பத்மநாபனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வி சமூக வளைதளங்களில் வலுத்து வருகிறது. கடந்த வாரம் சென்னை வந்திருந்த பாத்திமா வின் தந்தை அப்துல் லத்தீஃப் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
பாத்திமாவின் மொபைல் ஃபோனை கொல்லம் காவல்நிலையத்தில் அவரது தங்கையான ஆயிஷா பயன்படுத்திய சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. எனவே பாத்திமா எழுதிய கடிதங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், சுதர்சன் பத்மநாபனை கைது செய்வதற்கான வலுவான ஆதாரங்களை திரட்டுவதாகவும் காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் விசாரணையின் போக்கில் திருப்தி இல்லையெனவும் , பிரதமரை சந்திக்க போவதாகவும் பாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டினார். இந்நிலையில் சமீபத்திய செய்தியின் அடிப்படையில் தடவியல் ஆய்வில் அந்த கடிதம் பாத்திமாவின் கடிதம்தான் என்பது ஊர்ஜிதமான பின்னரும் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி சமூக வளைதளங்களில் எழுப்பப்படுகிறது.
“ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினர் சமூக மக்களில் சிறிதளவேனும் ஏதோவொரு குற்றத்தில் சந்தேகம் இருந்தால் அவரை கைது செய்துதானே விசாரிப்பது வழக்கம், ஆனால் உயர் வகுப்பை சார்ந்த சுதர்சன் பத்மநாபன் மீது வலுவான ஆதாரங்கள் இருந்தும் விசாரணை செய்து கைது செய்வோம் என்று சொல்கிறது.., சுதர்ஷன் பத்மநாபனை கைது செய்யாவிடில் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் மாணவர் அமைப்புகள் கூறி வருகின்றன.”