இந்தியா முழுக்க உள்ள வஃபு போர்டுகள் சார்பாக PM Cares கொரோனா நிவாரண உதவிக்கு ரூபாய் 51 கோடிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அலிகார் பல்கலை சார்பாக சுமார் 1.5 கோடியும், அலிகார் பல்கலை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 100 கொரோனா படுக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அஜ்மீர் தர்கா நன்கொடை:
அஜ்மீர் தர்கா சார்பாகவும் உபி மற்றும் டெல்லியின் சுற்றுப்புறத்தில் இருக்கும் தர்காக்களின் சார்பாகவும் (தர்கா கமிட்டி — காதீம்ஸ் மற்றும் ஷஜ்ஜதா நஸூன்) கணிசமான (1.4 கோடி) தொகை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அஜ்மீர் தர்கா சார்பில் நடத்தப்படும் க்வாஜா மாடல் ஸ்கூலிலும் குவாரண்டைன் படுக்கைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தர்கா கமிட்டி மூலமாக உதவுயும் உணவும் பெற்ற 4,500 பேர்களில் அனைத்து சாதி, மதம் சார்ந்தவரும் அடங்குவர்.
பள்ளிவாசலில் கொரோனா வார்டுகள்:
இந்தியா முழுக்கவுள்ள ஹஜ் ஹவுஸ்கள் மூலமாகவும் நன்கொடை வழங்கியுள்ள நிலையில் , 16 முக்கிய ஹஜ் ஹவுஸ்கள் கொரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பள்ளிவாசல்களிலும் கொரோனா வார்டுகள் அமைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறுபான்மையினர் அமைச்சகத்தின் சார்பாக சுமார் 1,500 பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து, கொரோனா தொற்றுக்கிருமி அகற்றும் சேவைக்கு தயார்படுத்தி அவர்கள் தற்போது சம்பளமில்லாத சேவையில் பணி செய்து வருகின்றனர்.
இதில் “ஜான் பி ஜஹான் பி” என்ற திட்டத்தின் கீழ் மேலும் 2,000 வஃபு போர்டு பணியாளர்களுக்கு சுகாதார பணியாளர் பயிற்சியளிக்கப்பட்டு சேவைக்கு தயாராகிவருகின்றனர். இந்த தகவலை பாஜக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. தெரிவித்துள்ளார்.
சங்கிகளால்* பொறுத்துக்கொள்ள முடியவில்லை:
*இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்தவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்கள் தங்களை அடையாள படுத்தி கொள்ளும் சொல்.