கான்பூரைச் சேர்ந்த முஹம்மத் மஹபூப் மாலிக் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வருகிறார். அவரது வருமானத்தின் மூலம் ஊரில் உள்ள 40 குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். இதற்காக அவரது மொத்த வருமானத்தில் 80% செலவாகிறது. இவரது இந்த செயல் பாராட்டிற்குரியது. உத்வேகம் அளிக்க கூடியது என்று பிரபல முன்னாள் இந்தியா கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையிலும் இவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில மதவெறி அதிமேதாவிகள் வெறுப்பு கருத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.