அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையம் (USCIRF) நேற்று தனது ஆண்டறிக்கையை (Annual Report) வெளியிட்டது. இதில் இந்தியாவில் முஸ்லீம்கள் பி.ஜே.பி அரசால் மிகவும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- தப்ரேஸ் அன்சாரி கொலையை சுட்டி காட்டி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பெயரில் கொலைகள் நடப்பது
- டெல்லியில் CAA போராட்டத்திற்க்கு எதிராக திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டது
- மாட்டின் பெயரால் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, இதில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் தாக்கப்ப்ட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கும் BJP, RSS-க்கும் உள்ள தொடர்பையும் சுட்டி காட்டியுள்ளது
- NRC, CAA குடியுரிமை சட்டத்தின் மூலம் முஸ்லீம்களை அச்சுருத்தியது
- கஷ்மீரின் நிலை
- பாபர் மசூதி தீர்பு
அமித் ஷா, உ.பியின் யோகி, RSS, BJP என அனைவரின் பெயர்களையும் சுட்டி காட்டி, இந்தியாவில் முஸ்லீம்களின் மத சுந்ததிரம் பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
இன்னும் பல விஷயங்கள் இந்த அறிக்கையில் உள்ளது. நடந்த அனைத்து சம்பவங்களின் தொகுப்பாக இந்த அறிக்கை உள்ளது. இந்திய முஸ்லீம்களின் உரிமையை நிலை நாட்ட அமெரிக்க அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது
ஆதாரம் : அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை.
மத சுதந்திரம் குறைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விரைவில் இணைக்கும் நிலை உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியான இந்த அறிக்கையை தொடர்ந்து, இன்று அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை unfollow செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் பதில் அளித்துள்ளது மோடி அரசு, அதில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் பொய் என்ற ரீதியில் எதிர்கட்சிக்கு பதில் அளிக்கும் தொனியில் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா விமர்சனத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. மறுப்பு வெளியிடுவதற்கு முன்னரே மோடி கட்சியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ, யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அறிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக பேசியுள்ளார்.