Uttar Pradesh

பால் பாக்கட்டை திருடி செல்லும் உபி போலீசார் – வசமாக சிக்கிய வீடியோ !

உபி போலீசார் பால் பாக்கட்டை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் ஆன்லைனில் வெளியானதை அடுத்து வைரலாக பரவி வருகிறது. ஜனவரி 19 ம் தேதி அதிகாலையில் நொய்டா போலீசார் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் சீருந்து கடை ஒன்றின் அருகே வந்ததும் நிறுத்தபடுகிறது. உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் காவலர் ஒருவர் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடப்பதை காண முடிகிறது.

பிறகு பால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொள்கலத்தில் அலேக்காக 2 பால் பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சீருந்தில் உள்ள மற்றொரு காவலரிடம் வழங்குபடுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து நொய்டா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர். எனினும் அது என்ன நடவடிக்கை என்று தெளிவுபடுத்தவில்லை.

போர்வை, நகை, பணம் திருடிய உபி போலீசார்:

முன்னதாக போராட்டக்காரர்களின் சால்வை உணவு பொருட்கள் போன்றவற்ற உபி போலீசார் பறித்து செல்லும் காணொளியும் வைரல் ஆனது. அதே போல முஸ்லிம் வீடுகளை குறிவைத்து அவர்களின் பணம், நகை, பொருட்களை என அனைத்தையும் கொல்லை அடித்து விட்டு வீட்டில் உள்ள பொருட்கள் அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பால் பாக்கெட் திருட்டு சம்பவமும் அரங்கேறி உள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய இவர்களே திருட்டு பயலுகலாக இருந்தால் மக்கள் எப்படி இவர்களை நம்பி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முன் வருவார்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.