RSS

ஆர்.எஸ்.எஸின் கோல்வால்கர் “ஆழ்ந்த சிந்தனையாளர்” என மத்திய கலாச்சார அமைச்சகம் டீவீட்; நெட்டிசன்கள் கண்டனம்

இந்திய தேசியத்தின் கலாச்சார அமைச்சகம், கோல்வால்கர் ஒரு சிந்தனை சிற்பி, தலைசிறந்த தலைவர், நிகரில்லா ஆளுமை என வாயார புகழ்ந்து ட்வீட் போட்டது தான் தாமதம்…, கனநிமிடத்தில் கடகடவென திரண்டு வந்து கண்டித்த நெட்டிசன்கள்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரை இமாலய உயரத்திற்கு புகழ்ந்து, அவரை நினைவு கூர்வதாக கூறியும் வருங்கால ஆட்சியாளர்களுக்கு இவரது கருத்துகளில் வழிகாட்டல்கள் உள்ளது எனவும் இந்திய கலாச்சார அமைச்சகம் ஒரு ட்வீட் போட்டிருந்தது இதில் கலாச்சார அமைச்சகத்தின் அமைச்சர் பிரஹலாத் படேல் மற்றும் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சிலரையும் டாக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை கண்டித்த பெருவாலியான சமூக ஊடகவியலாளர்களும், சமூக அறிஞர்களும் மற்றும் சாதாரண நெட்டிசன்களும், கோல்வால்கள் , ஹிட்லரின் நாசிக்கட்சியை ஆதரித்தவர், குடியரசு மற்றும் சமயசார்பற்ற இந்திய தேசிய சட்ட வரையறைகளை கடுமையாக எதிர்த்தவர், இவரை எப்படி ஒரு குடியரசு நாட்டின் கலாச்சார அமைச்சகம் போற்ற முடியும் ? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

குறிப்பாக அவர் எழுதிய மிகவும் சர்ச்சைக்குறிய புத்தகமான We, or Our Nationhood Defined and Bunch of Thoughts ல் அவர் மதசார்பற்ற தேசியத்தை வலுவாக சாடியிருந்தார். இந்தியா எப்போதும் ஒரு இந்து ராஷ்ட்டிரமாக அமைய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. இந்தியாவில் இந்துத்துவத்தை ஏற்காதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்பதும், அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்பதும் அவரது குறிக்கோளாக அப்புதகத்தில் எழுதியுள்ளதோடு… இந்துக்களுக்கு மூன்று எதிரிகள் உள்ளனர் அவர்கள் முஸ்லிம்கள, கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்றார்.

மேலும் அவரது புத்தகத்தில் ஜெர்மனில் ஹிட்லர் எவ்வாறு யூதர்களை ஒடுக்கினாரோ அதேபோல இந்தியாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட வேண்டும், நாஸிக்கள் செய்த ஒவ்வொரு செயலும் நம் முன் பாடமாக விவரிக்கப்பட்டுள்ளது, அவர்கள் எப்படி மதம்,கலாச்சாரம்,இனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ , அதற்கு மாற்றமாக நடக்கும் சிறுபான்மையினரை ஒழித்தார்களோ நாமும் அதே போல இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என எழுதியுள்ளார்.

கலாச்சார அமைச்சகத்தின் இந்த கோமாளித்தனமான செயலை எதிர்த்த சசி தரூர், சிபிஎம் பொலிட்பீரோ கவிதா கிருஷ்ணன், முன்னாள் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் ஜவஹர் சிர்க்கார், கவுரவ் கோகாய் மற்றும் சினிமா பிரபலங்களான ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சந்தா போன்றோர், நாட்டின் ஒவ்வொரு சமுதாயத்தையும் அரவணைத்து செல்ல வேண்டிய கலாச்சார அமைச்சகம் இப்படி மதவெறி தூண்டும் விதமான நபரை ஒருதலைப்பட்சமாக போற்றுவது வேடிக்கைக்குறியதும் கண்டனத்திற்குறியதுமாகும் என மறு ட்வீட் செய்துள்ளனர்.

கோல்வால்கர் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பினை தோற்றுவித்த கே.பி.ஹேட்கேவருக்கு அடுத்து சுமார் 33 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார், தேசப்பிதா காந்தியின் கொலை குற்றத்திற்காக மத்தியப்பிரதேச சிறைச்சாலையில் ஆறு மாத கடுங்காவல் அனுபவித்து வந்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுக்க சிறுபான்மையினர் மக்களை நசிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டி வேலைபார்த்தவர், இந்துத்துவ விதையை ஒவ்வொரு மூலையிலும் நட்டுச்சென்றவர், குடியரசுக்கு எதிரான நிலைப்பாடுடைய அவரது பாதை மிகவும் கொடூரங்கள் நிறைந்த ஒன்று. காந்தி கொலை வழக்கில் கோட்சேவுக்கு இணையான குற்றவாளி என அழைக்கப்பட்டவர்.