அரபு நாடுகளில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே சம்பாதித்து அதில் வாழ்ந்து வரும் பல இந்துத்துவாவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அரபிகளுக்கு எதிராகவும் மிகவும் மோசமான கீழ்த்தரமான வெறுப்பு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இத்தனை நாட்களும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்த அரபுலக மக்கள் தற்போது விழித்தெழ துவங்கியுள்ளனர்.
இதன் விளைவாக அரபுலக பிரமுகர்கள், அரசு குடும்பத்தார், தொழிலதிபர்கள் என பலரும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள், இஸ்லாமோஃபோபியா மற்றும் மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் பதிவுகளை தொடர்ந்து பதிந்து வருகின்றனர். நிலைமை இவ்வாறே சென்று கொண்டிருந்தால் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இத்தனை ஆண்டுகளாக நிலவி வரும் நல்லுறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகி விட்டதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்திய தூதராக அனுப்பப்பட்டுள்ள பவன் கபூரே இது குறித்து பேசும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது கொரோனா நோய் தொற்று முஸ்லீம்களால் தான் பரப்பப்படுகிறது என்கிற ரீதியில் பொய்யான விஷம பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவில் இஸ்லாமோஃபோபியா அதன் உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கொரோனா முஸ்லிம்களால் தான் பரப்பப்படுவது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இது போதாததற்கு இவர்களுடன் இணைந்து பெரும்பான்மை மீடியாக்களும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் பிரதமர் மோடியே இது குறித்து பேசும் நிலை ஏற்பட்டது.
அதாவது கொரோனா நோய் என்பது இன, மத, நிறம், ஜாதி, மொழி, நாட்டு எல்லைகள் என பார்த்துவிட்டு தாக்குவதில்லை. எனவே நாம் அனைவரும் ஒற்றுமைக்கும், சகோதரத்துவதிற்கும் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். இதில் நாம் அனைவரும் ஒன்று பட்டு இருப்போம் என ட்வீட் செய்யும் நிலைமை ஏற்பட்டது.
பிரதமர் மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளதை குறிப்பிட்டு..
எதன் அடிப்படையிலும் வேற்றுமையை காண்பிப்பதில்லை என்ற கோட்பாட்டில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகம் ஒத்த கருத்தில் உள்ளன. வேற்றுமையை காண்பிப்பது என்பது நம் நாட்டு தார்மீக நெறி முறைகளுக்கும், நம் நாட்டு சட்டத்திற்கும் எதிரானது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் பவன்.
பாசிஸ்டுகள் தொடர் முஸ்லீம் வெறுப்பு பதிவுகளை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டும், சிலர்வேலை இழந்து திரும்ப தாய்நாட்டிற்கேஅனுப்பப்படும் நிலையும் தொடர்ந்து வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அரபு அமீரகத்திற்கான தூதரக அதிகாரி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்று விமர்சகர்கள் கூடுகின்றனர்.