Picture Credit- Republic
ஜூலை 24ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் ரவி தத் பாஜ்பாய் ஆகியோர் எழுதிய புத்தகத்தை நாடாளுமன்ற ஆடிட்டோரியத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 1977 ல் முன்னாள் பிரதமர் சந்திர சேகரை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். “நான் அவரை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன், அப்போது நான் பைரோன் சிங் சேகாவத் ஜியுடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரு தலைவர்களும் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தபோதிலும் நெருக்கமான நல்லுறவை பேணி வந்தனர். ” என்று தெரிவித்தார்.
வாஜ்பாய் ஜி மற்றும் அத்வானி ஜிக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நான் நாக்பூருக்குச் சென்றிருந்தேன். சந்திர சேகர் ஜி வாஜ்பாயை ஒரு குருவாகக் கருதி வந்தார். மேலும் அவர் ராஜினாமா செய்வது பற்றி வாஜ்பாய் குரு ஜியுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். இருப்பினும், குறிப்பிட்ட அந்த நாளில், வாஜ்பாய் ஜியின் விமானம் நாக்பூரில் தாமதமாக வந்தடைந்தது. சந்திர சேகர் ஜி அழைத்த நேரத்தில், வாஜ்பாய் ஜி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தடையவில்லை , எனவே நான் தான் அந்த அழைப்பை எடுக்க வேண்டியிருந்தது. இராஜினாமா முடிவைப் பற்றி வாஜ்பாய் ஜியிடம் தெரிவிக்கும்படி சந்திர சேகர் ஜி என்னிடம் தான் கூறினார்” என்று சந்திர சேகரின் ராஜினாமா செய்தி முதலில் அவரை எவ்வாறு அடைந்தது என்பதற்கான ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி மோடி நினைவு கூர்ந்தார்.
ஆனால் இந்த சமயத்தில் (1977 கலீல்) நீங்கள் டீ விற்று கொண்டிருந்ததாக கூறி இருந்தீர்களே?
அப்போதெல்லாம் என்னிடம் பண பை (பர்ஸ்) இருந்ததில்லை ஏனெனில் பணம் இருப்பவர்களுக்கு தானே பர்ஸ் தேவைப்படும் என்று கூறி இருந்தீர்களே?
1977 ஆம் ஆண்டில் அவசரநிலை (எமெர்ஜன்சி ) அமலில் இருந்தது நரேந்திரமோடியின் கூற்றுப்படி கூட அவர் சீக்கியராக உடையணிந்து கொண்டு இந்திரகாந்தியிடமிருந்து ஒளிந்து கொண்டிருந்தார்! என்பன போன்ற கருத்துகளை தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.