Islamophobia

முஸ்லிம்களின் இனஅழிப்புக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் நடிகை கங்கனாவின் சகோதரி கணக்கை முடக்கியது ட்விட்டர்..

மத விரோதம் வளர்க்கும் வகையில் பதிவிட்ட நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டேலின் கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி சண்டேல் முஸ்லீம் விரோத கருத்துக்களை தொடர்ந்து பேசி வருபவர். எனினும் இம்முறை அனைத்து வரம்பையும் மீறி இன அழிப்புக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம் கருத்து தெரிவித்துள்ளார் அவர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ரங்கோலி சண்டேல்
“முல்லாக்களையும் (முஸ்லிம்களையும்), மதச்சார்பின்மை பேசும் மீடியாவினரையும் வரிசையாக நிற்கவைத்து சுட்டுத்தள்ள வேண்டும். இதனால் நாம் நாஜிகள் என அழைக்கப்படலாம், அதுபற்றி எனக்கு கவலை இல்லை ” என இன அழிப்புக்கு வழிவகுக்கும் வாசகங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் பலரும் அதனை பகிர்ந்து இருந்தனர். இந்த மதவெருப்பு உமிழும் பதிவினை குறித்து படத்தயாரிப்பாளரான ரீமா கக்தி என்பவர் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மும்பை போலீசுக்கு டாக் செய்து மறு பதிவு இட்டிருந்தார்.

அதில் கங்கனாவின் தங்கை ரங்கோலியின் வார்த்தையை கவனியுங்கள், நாடே இங்கு போர்க்களமாகி வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து போராடி வருகிறோம் ஆனால் இவருடைய இந்த மதவெருப்பு பிரச்சாரம் குழப்பத்தை உண்டு பண்ணுவதாகவும் கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து சாக்ரட் கேம்ஸ் சீரியலில் வரும் நடிகையான குப்ரா சேட் என்பவரும், இதை பற்றி விமர்சித்த காரணத்திற்காக தன்னை ரங்கோலி ப்ளாக் செய்துவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மத துவேசத்தை பரப்பும் நேரமல்ல இது என அவருக்கு கமண்ட் இட்டிருந்தார் குப்பாரா. அவரும் உத்தவ் தாக்கரே மற்றும் மும்பை போலீசுக்கு இதனை டாக் செய்தார்.

மற்றொரு படத்தயாரிப்பாளரான ஹன்ஸல் மெஹ்தா தனது ட்வீட்டில், ரங்கோலியின் இந்நடவடிக்கை தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் முந்தைய காலங்களில் அவர் தமக்கு நல்ல தோழியாக இருந்ததாகவும் தற்போது அவரது மத துவேசத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறிய கையோடு ட்விட்டரில் ரங்கோலியின் அகவுண்டினை டிஸ்மிஸ் செய்யுமாறு வேண்டுதல் வைத்தார்.

ரங்கோலியின் கணக்கு முடக்கப்பட்டதற்கு வரவேற்பு குவிந்தவண்ணம் உள்ளன. இதனால் பாசிஸ்டுகள் கடும் வயிற்று எரிச்சலில் உள்ளனர்.

இதையடுத்து ரங்கோலியின் ட்விட்டர் அகவுண்டு முடக்கப்பட்டுள்ளது. இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவும் பாலிவுட் சினிமா உலகில் இப்படியொரு மதவெறி நடிகைகள் இருப்பதை தற்போது தான் காண்கிறோம் என பாலிவுட் வட்டாரம் அதிர்ச்சி தெரிவித்து வருகிறது.