பாஜக ஆளும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் ஒரு தொடர் கதையாக உள்ளது. அதில் ஒன்றாக தற்போது குருக்ராம் மாநகராட்சி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது பாஜக வின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம்.
குடிமை அமைப்பின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 129 உரிமம் பெற்ற இறைச்சி கடைகளில், “குறைந்தது 120” செவ்வாயன்று மூடப்படிருந்தது என எம்.சி.ஜி.யின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருகிராம் மாநகராட்சி மற்றும் குர்கான் போலீசார் அடங்கிய 70 நபர்கள் நகரமெங்கும் உரிமம் பெற்ற 129 கடைகளையும் சோதித்தனர். அவற்றில் குறைந்தது 120 கடைகள் மூடப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இறைச்சி கடை மூடல் சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாள் இது என்பதால், மக்களை எச்சரிக்கையுடன் விட்டுவிட்டோம். எவ்வாறாயினும், அடுத்த வாரம் முதல் செவ்வாய்க்கிழமைகளில் கடை செயல்படுவதாகக் கண்டறியப்படும் எவருக்கும் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும், ”என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
ஒருவர் செவ்வாயன்று இறைச்சி உண்ண விரும்பவில்லை என்றால் அவர் கடைக்கு வந்து இறைச்சி வாங்க மாட்டார். இது ஒருவரின் தனிபட்ட விஷயம். இதற்காக அனைத்து கடைகளையும் மூட் சொல்வது என்ன நியாயம் என்கின்றனர் இறைச்சி கடை வியாபாரிகள்.
இச்சட்டம் அவர்கள் மீது திணிக்கப்படுவதாகவும், கட்டுப்படுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் நகரத்தில் உள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள் கூறினர்.
சந்தையில் இறைச்சி விற்பனையாளரான ஆரிஃப், “நாங்கள் எங்கள் கடைகளுக்கு மிக அதிக வாடகை செலுத்துகிறோம் – ரூ .80,000 அல்லது அதற்கும் மேல் வாடகை உள்ளது. அத்தோடு, எங்கள் தங்குமிடம், அன்றாட செலவுகளையும் பார்க்க வேண்டியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை எங்கள் கடைகளை மூட வேண்டுமென்றால் எங்களால் எப்படி போதுமான வருமானத்தை ஈட்ட இயலும் ? வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வாடகை கட்டணம் வசூலிக்குமாறு எங்கள் கடை உரிமையாளர்களிடம் சொல்ல முடியாது. ” என்கிறார்.