ஜூலை 9-ம் தேதி ஃபைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முஹம்மது ஃபைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் குண்டர்களால் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடலில் காயங்களுடனான ஃபைசானின் புகைபடங்கள் வைரலாக தொடங்கின. இதனை தொடர்ந்து ஃபைசான் க்கு ஆதரவாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், ஃபைசானைத் தாக்கிய நான்கு நபர்களையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
ஃபைசான் மீதே வழக்கு !
இந்நிலையில் தற்போது போலீசார் பாதிக்கப்பட்ட ஃபைசான்,சாஹு ல் ஹமீது, முஹமது யூனுஸ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கடும் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.
இரு தரப்பினருக்கிடையே பகைமையை தூண்ட முயற்சித்தல் (153ஏ), தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் (294பி) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஃபைசானின் நிலை தற்போது தான் சற்று தேறியுள்ள நிலையில் அவர் எப்போது வேண்டுமானால் கைது செய்யப்படலாம் என்றே தெரிகிறது.
சட்ட பிரிவு 153A(1)
பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது. குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்
“ஃபைசான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், அவர் கைது செய்யப்படுவார், ஆனால் இதற்கிடையில் அவர் முன் ஜாமீன் வாங்க முயற்சித்து வருகிறார்.” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஃபைசானைத் தாக்கிய – தினேஷ் குமார் (28), ஆர் அகத்தியன் (29), ஏ கணேஷ் குமார் (27) ஆகிய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று முஹம்மது ஃபைசான் கூறுகிறார்.
இந்நிலையில் நிலைமை மோசம் அடைய வாய்ப்புள்ளதால் சர்ச்சைகளுக்கு பெயர்போன இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அப்பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.