கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த 4 நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (22-11-19) அன்று 32 வயதான பெண் ஒருவரை கொடூரமாக கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தது யார் பலாத்காரம் செய்வது என்பது குறித்து எழுந்த சண்டையில் கும்பலில் ஒருவன் அடித்து கொல்லப்பட்டான்.
பாதிக்கப்பட்ட பெண்மணி நெய்வேலியைச் சேர்ந்த ஒரு விதவை பெண் என்றும் அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருக்கையில் அவ்வழியில் குடிபோதையில் சுற்றித்திரிந்த 5 நபர்கள் அப் பெண்ணின் உறவினரை தாக்கி ஓடவிட்ட பின்னர் அந்தப் பெண்ணை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அடுத்தது யார் அந்த பெண்ணை அடைவது என்பது குறித்து ஏற்பட்ட சச்சரவு சண்டையாக மாறி கும்பலில் ஒருவனான பிரகாஷ் என்பவன் அவனது நண்பர்களாலேயே அடித்து கொல்லப்பட்டான். பிறகு அந்த பெண்ணையும், கொலை செய்யப்பட்ட நண்பனையும் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.
பிறகு சுயநினைவுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து டி.என்.எம் ஊடகத்திற்கு நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரும் நண்பர்கள். ” என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எஸ் கார்த்திக் (23), எம் சதீஷ்குமார் (23), சி ராஜதுரை (25), ஏ சிவபாலன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் எம் பிரகாஷ் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மளிகைப் பொருட்களை வாங்கி வீட்டிற்கு செல்வது போன்ற சாதாரண நிகழ்வு இத்தகைய கொடூர சூழ்நிலைக்கு வழிவகுத்தால் ஒரு பெண் என்ன தான் செய்ய முடியும்? என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்றும் இன்ஸ்பெக்டர் மேலும் கூறினார்.
அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தாத வரையில் இந்த குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும் போல !