21 இந்திய கடற்படை வீரர்களுக்கு கரோனா தொற்று. .கடற்படை தளத்தில் இருந்த வீரர்களுக்கு கொரொனோ தொற்று எப்படி வந்திருக்க இயலும்?. முஸ்லீம்களால் தொற்று பரவியது என வாய்கிழிய பேசும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள், ராணுவத்தினரிடையே தொற்று பரவும் நிலையை உருவாக்கியது யார் எனச் சொல்லுவார்களா?
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்ளாக தொற்று சென்றிருக்கிறதெனில், சாமனிய மக்களுக்கு நீங்கள் கொடுத்த பாதுகாப்பு கட்டமைப்பு பல்லிளிக்கிறதே!.
இசுலாமியர் மீதான குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட திசைதிருப்பல், மதவெறி பிரச்சாரமன்றி வேறல்ல.
இராணுவத்தையே பாதுகாக்க வக்கற்ற அரசு இந்த அரசு என்பதையே இச்செய்தி அம்பலமாக்குகிறது. இராணுவ வீரர்களைப் பாருங்கள், அவர்கள் தேசத்திற்காக உழைக்கிறார்கள் என வாய்கிழிய பேசும் எந்த பாஜக தலைவரும் இந்த இராணுவத்தினருக்கு எப்படி தொற்றுக்கு ஆளானார்கள்? என்று விளக்கட்டும் என தோழர் திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.