Press Freedom Uttar Pradesh

பாசிசத்தை தோலுரிக்கும் பிரபல ‘தி வயர்’ ஊடகத்தின் ஸ்தாபகர் மீது யோகி அரசு எப்.ஐ.ஆர்; 3,500க்கும் அதிகமான பிரபலங்கள் எதிர்ப்பு !

பொதுவாக பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமான செய்திகளை பிரசுரிக்கும் நிலையில், அதற்கு மாற்றமாக ஒரு சில குறிப்பிடத்தக்க ஊடகங்களே பாசிசத்திற்கு எதிராக பணிகள் தொய்வின்றி மிகவும் சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டு வருகின்றன, அதில் ஒரு இணைய தள ஊடகம் தான் தி வயர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் கோவில் தலைமை பூசாரியான யோகி ஆதித்யநாதின் அரசாங்க காவல்துறை (எனும் அஜய் பிஷ்த் சிங்) தி வயர் ஊடகத்தின் ஸ்தாபகரான சித்தார்த் வரதராஜன் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு காரணம் அவர் தனது இணையத்தள ஊடகத்தில் பதிவிட்ட செய்திதான்.

கொரோனா நோய்த்தொற்று குறித்த “கள நிலவரத்தை உள்ளதை உள்ளவாறு” கூறியமைக்கும், மேலும் உபி யில் மத ரீதியான நிகழ்வுகளை குறித்து செய்தி வெளியிட்ட காரணத்திற்காகவும் இவ்வாறு யோகி அரசு செயல்படுவதை கண்டித்து நீதிபதிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என 3500 க்கும் அதிகமான பிரபலங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கையொப்பமிட்டவர்களில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், முன்னாள் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்திரு மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஞ்சனா பிரகாஷ், கடற்படை ஊழியர்களின் இரண்டு முன்னாள் தலைவர்கள் அட்மிரல் ராம்தாஸ் மற்றும் அட்மிரல் விஷ்ணு பகவத் மற்றும் முன்னாள் என்டிஏ அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் அடங்குவர்.

இதுதவிர முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், எழுத்தாளர்கள் விக்ரம் சேத், நயன்தாரா சாகல் மற்றும் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, நந்திதா தாஸ் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரும் அடங்குவர்.

திரு.வரதராஜனுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கையை கைவிடுமாறும், அவருக்கு எதிரான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரியும் மேல்குறிப்பிட்டோர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பரவி வரும் நோய் தொற்றை ஒரு காரணமாக ஆக்கி, மீடியாக்களின் குரல்வளையை நெறிக்க கூடாது என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் மீடியாக்கள் பரவிவரும் கொரோனா நோய் தொற்றுக்கு மாதசாயம் பூச வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்ச போவதில்லை என சித்தார்த் வரதராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.