நம்ம கேப்டன் விஜயகாந்த் அடிக்கடி “தமிழ்” என்பதை “தமுல்” என உச்சரிப்பதை கேலி செய்திருப்போம். அவரது ஆங்கில உச்சரிப்பு போல இதுவும் தவறானது தான் போல என கிண்டல் செய்திருப்போம். ஆனால் உண்மையில் தமிழ் எனும் சொல்லை தமுல் என்றே பழங்காலத்திலும் உச்சரித்துள்ளனர் என்பதை இந்த விபரத்தை படித்த பிறகே புரிகிறது.
தமிழில் வெளிவந்த முதல் புத்தகம்
கார்த்தியா எ தமுல் இ போர்ச்சுகீஸ் என்ற ஒரு பைபிள். போர்த்துகீஸ் எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல். அதன்
முதல் தமிழ் பிரதி 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிஸ்பனில் வெளியானது. அதனை வெளியிட்டவர்கள் வின்சென்ட் டி நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருஸ் ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர். கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல் என அறியப்படுகிறது ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக் குடியரசு நாட்டின் தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.
மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷ்யா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது.
காலணியாதீக்க மற்றும் உள்ளூர் அரசியல் காரணங்களுக்காகவும் 1547ஆம் ஆண்டில் சோழமண்டலக் கடற்கரையில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய யூதர் என்ரிக்கோ என்ரீக்ஸ் (1520–1600) என்னும் இயேசு சபை மறைபரப்பாளரின் முயற்சியாலும் உரோமானிய வரிவடிவிலும் தமிழ் வரிவடிவிலும் தமிழில் அச்சிடுவது கைகூடியது. தமிழகத்தில் தங்கிப் பணியாற்றிய காலத்தில் ஐந்து வெவ்வேறான தமிழ் நூல்களை இந்திய மேற்கு கடற்கரையின் பல்வேறு இயேசு சபை குடியிருப்புக்களிலிருந்து தமிழ் வரிவடிவில் என்ரீக்ஸ் வெளியிட்டார். மேலும் தமிழின் இலக்கணம் மற்றும் அகரமுதலி ஒன்றையும் தொகுத்திருந்தார். அச்சிடப்படாதபோதும் இந்நூல்கள் துவக்க கால ஐரோப்பியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. “எந்தவொரு இந்திய மொழியிலும் ஆழ்ந்த புலமை பெற்ற முதல் ஐரோப்பிய அறிஞர்” என என்ரீக்சைப் பற்றிக் கிரகாம் ஷா குறிப்பிடுகிறார்.
1575ஆம் ஆண்டுவாக்கில் தமது கிழக்குக் கடற்கரை திருத்தூதுப் பணிகளிலிருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டபிறகு, என்ரிக்ஸ், தம் நூல்களைத் தொகுக்க துவங்கினார். இதற்குத் தமிழ் அந்தணராக இருந்து 1562ஆம் ஆண்டு இயேசு சபையில் இணைந்த தந்தை பெரோ லூயிஸ் துணையாயிருந்தார். லூயிசின் துணையுடன் கொல்லத்தில் இருந்த தந்தை யோவான் டி ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கொன்சால்லவ்ஸ் முதல் தமிழ் அச்சுருக்களை வடித்தார்.
1577ஆம் ஆண்டு கோவாவில் என்ரீக்சின் ஐந்து நூல்களில் முதலாவதான “டாக்ட்ரினா கிறிஸ்டம் என் லிங்குவா மலபார் தமுல் ” – தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Malauar Tamul – Tampiran Vanakam)அச்சிடப்பட்டது. “மலபார் தமிழில் கிறித்தவ போதனை” என்பது இதன் பொருள்.
இந்திய வரிவுருவொன்றில் வெளியான முதல் நூல் இதுவே. இதுபற்றிச் சில அறிஞர்கள் ஐயம் எழுப்பியபோதிலும், கிரகாம் ஷா அந்த அச்சிடல் நிகழ்ந்ததென்றே உறுதியாகக் கூறுகிறார். இரண்டாவதாக வெளிவந்த நூல் (“கிரிசித்தியானி வணக்கம்”, ஆண்டு: 1578) பதினாறு பக்கங்களே உடையதாக இருந்தது. மூன்றாவது நூல் போர்த்துக்கலில் பரவலாகியிருந்த மார்கோசு என்பவர் உருவாக்கிய “கிறித்தவ சமயப் போதனை” (Catechism) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 127 பக்கங்களாக வெளியானது. நவம்பர் 14, 1579ஆம் ஆண்டில் வெளியான இந்நூலுக்கான புதிய அச்சுகள் கொச்சியில் வார்த்தெடுக்கப்பட்டன. மூன்று கிறித்தவ சமயப் போதனை நூல்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அச்சுருக்களில் அடுத்த மூன்றாண்டுகளில் வெளியாயின. கொச்சியில் அச்சிடப்பட்ட என்றிக்கசின் மற்ற இரு நூல்கள்:
பாவ அறிக்கை நூல் (Confessionario) 1580 (214 பக்கங்கள்)அடியார் வரலாறு (Flos Sanctorum), 1586 (669 பக்கங்கள்)
இவற்றை கொண்டு நாம் அறிய முற்படுவது தமிழ் எனும் சொல்லினை “தமுல்” என்ற உச்சரிப்பில் தான் ஐரோப்பியர்கள் கையாண்டுள்ளார்கள். சமஸ்கிருத சொற்களை மிகச்சாதாரணமாக உச்சரித்த அவர்களுக்கு தமிழில் உள்ள ழகரத்தை – “ல” அல்லது “ள” என்றும் உச்சரித்திருக்க முடியும் அதுபோல , மி எனும் எழுத்தினை மு என உச்சரிப்பு செய்ய அவசியமும் இல்லை. நமக்கு முந்தையவர்கள் ழகரத்தை ல என்றே பெரும்பாலும் உச்சரித்திருப்பார்கள். அழுந்தந்திருத்தமாக ழகரத்தை உச்சரிக்காத தமிழறிஞர்களும் இப்போது நம்மிடையே உண்டு. அரபு ,பிரெஞ்சு மற்றும் ஹீப்ரு தவிர “ழ” எனும் ஒரு எழுத்து பெரும்பாலான உலக மொழிகளில் இல்லை. எனவே இவை பிற்காலத்தைய எழுத்து மற்றும் மொழிக்கான நவீன வடிவங்களாக இருக்கலாம். தமிழில் ஒற்று எழுத்துக்களும் “ஐகார” சொற்களும் பின்னாளைய இணைப்புகளே என்பதனை நாம் அறிவோம். கிராமத்துவாசிகளில் பலரும் தமுல்நாடு ,தமுலன் என சொல்வதை கேட்கிறோம்.
ஓரிசாவில் பாக்கு மரத்தினை தமுல் மரம் என்கின்றனர். பாக்கு,கமுகு,பனை போன்றவை தமிழ்நாட்டுக்கே உரிய அடையாளங்கள் என்பதை இதை வைத்து அறியமுடிகிறது.
தமிழ் எனும் சொல்லை மற்ற நாட்டினர் இன்றளவும் எவ்வாறு உச்சரிக்கின்றனர் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இருந்து பிரிந்த மொழி மலையாளம் என்பதால் மலையாளத்தில் ழகரமும் உண்டு.
பிரெஞ்சு – tamoul (தமுல்),
ஸ்பானிஷ் – (தமில்)
ஜெர்மன்/டச்சு – Tamilisch (தமீலிஷ்),
ரஷ்யன் – Тамильский (தமீல்ஷ்கீ)
தெலுங்கு (తమిళము) –தமிளமு
கன்னடம்ತಮಿಳು–தமிளு
மலையாளம்തമിഴ് — தமிழ்
இந்தி, வங்காளம் மற்ற எல்லா வடமொழிகளிலும் (तमिल) -தமில்
சமஸ்கிருதம்तमिज़्–தமிழ்–புதியதாக உருவாக்கப்பட்ட தமிழின் “ழ” விற்கான சமஸ்கிருத எழுத்து ज़
சமஸ்கிருதம் இப்போது தான் ழ – வை கண்டுபிடித்துள்ளது என்பதை அறிக!
ஆக்கம் : நஸ்ரத்