Modi National Security Pulwama

புல்வாமா தாக்குதலின் போது மேன் vs வைல்ட் படப்பிடிப்பில் மோடி !- நெட்டிசன்கள் சாடல்

மேன் Vs வைல்ட் என்ற பிரபல டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டதை டிஸ்கவரி சேனல் திங்களன்று உறுதிப்படுத்தியது.

இரண்டிற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு.சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை.இருப்பினும், எபிசோட் எப்போது படமாக்கப்பட்டது என்று டிஸ்கவரி தொலைக்காட்சியும் கூறமருக்கிறது, இந்திய அரசும் இதை குறித்து எந்த தகவலும் வெளியிடுவதாக இல்லை.

புல்வாமா தாக்குதல் :

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.மாலை 3 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எங்கே இருக்கிறார் என நாடு தேடிக்கொண்டிருந்தது. நான்கைந்து மணி நேரம் கழிந்த பிறகும்கூட பிரதமர் பற்றிய தகவல் இல்லை. அன்று 2.30 முதல் 4.30 மணி வரை ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் ‘ஷூட்டிங்கில்’ இருந்ததாக காங்கிரஸ் கட்சியும் சில ஊடகங்களும் கூறின. ஆனால், என்ன ‘ஷூட்டிங்’ என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பும் மற்ற எதிர் கட்சியினரும் கருத்திட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 14 தேதி வாக்கில், மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரில்ஸ் இந்தியாவில் முக்கியமான நபருடன் சூட்டிங்கில் இருப்பதாக தனது ட்விட்டர் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவுகள் சில நாட்களில் அழிக்கப்பட்டன. இந்த விவரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், திங்கள்கிழமை டிஸ்கவரி சேனல் வெளியிட்ட விளம்பரத்தில் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் மோடி ஜிம் கார்பெட் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் தோன்றியிருக்கிறார். அதில், “சுற்றுச்சூழலையும் வன உயிரினங்களையும் எப்படிப் பாதுகாப்பது என உலக மக்களுக்கு சொல்லப்போகிறேன்” என்கிறார் பிரதமர். ‘நாட்டைக் காப்பாற்றும் இராணுவ வீரர்கள்’ என முழங்கிய மோடி, அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று கருத்திட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

https://twitter.com/Cowtuk/status/1155800921999314948?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1155800921999314948&ref_url=https%3A%2F%2Fwww.vinavu.com%2F2019%2F07%2F30%2Fmodi-was-busy-with-man-vs-wild-shooting-with-bear-grill-in-the-time-of-pulwama-attack%2F

“உண்மையில் பேர் கிரில்ஸ் மோடியை கடினமான சூழ்நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அவரை பத்திரிகையாளர் சந்திப்பு அழைத்துச் செல்ல வேண்டும்” என்கிறார் ஸ்ரீவத்சவா.

Prime Minister Modi’s official schedule for his Uttarakhand visit. Photo: TV9 Bharatvarsh

தற்போது வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பில் – மோடி ஒரு ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதாக உள்ளது – காலை 11:15 மணியளவில் கலகரில் அது படமாக்க பட்டிருக்கலாம்.அங்கிருந்து அவர் படகில் திகலா வன விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.

மாவட்ட மற்றும் தேசிய பூங்கா அதிகாரிகள் டிஸ்கவரி படப்பிடிப்பு குறித்து குறிப்பிட்ட விவரங்களை கொடுக்க மறுப்பதால் , புல்வாமா தாக்குதலுக்குப் பின் படமாக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்னா என்று உறுதியாக கூற இயலாது. டிஸ்கவரி ஆகட்டும் அரசு தரப்பு ஆகட்டும் இது குறித்து வாய்திறக்காமல் இருப்பது ஒரு வேலை தாக்குதல் நடந்த போதும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது என்று ட்விட்டரில் கருத்து பரிமாற்றம் நடந்து வருகிறது.

தாக்குதலுக்கு ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு நெறிமுறைகளை நன்கு அறிந்த ஒரு முன்னாள் மூத்த அதிகாரி பிரபல ஆங்கில ஊடகமான தி வயருடன் பகிர்ந்து கொண்டதாவது : “தாக்குதல் நடந்த உடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் குறைந்தபட்ச தகவல்கள் கூட மோடிக்கு தெரிவிக்க படாமல் இருந்திருக்கும் என்று கற்பனை செய்வது கடினமாக உள்ளது “என்று கூறினார்.

மோடியின் கால அட்டவணை :

எனவே, பயங்கரவாத தாக்குதல் குறித்து 30 நிமிடங்களுக்குள் அல்லது பிற்பகல் 3:15 மணிக்கு குண்டுவெடிப்புக்குப் பின்னர் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். மேலே தரப்பட்டுள்ள கால அட்டவணை படி ,அப்போது அவர் மதியம் கார்பெட்டில் உள்ள திகாலாவில் இருந்திருப்பார் . பின்னர் மதியம் 1 மணியளவில் திகலா விருந்தினர் மாளிகையிலும் பிறகு அவர் பூங்காவில் சிறிது தூரத்தில் உள்ள கினவ்லி விருந்தினர் மாளிகைக்கு சென்றிருப்பார். அவர் ருத்ராபூரில் ஒரு பாஜக பொது கூட்டத்திற்காக போன் மூலம் உரையாற்றிய நேரத்தில் மாலை 5:10. இந்த சமயத்தில் மோடிக்கு நிச்சயமாக புல்வாமா தாக்குதல் குறித்து தெரிந்திருக்கும்.

எவ்வாறாயினும், அந்த உரையில் அவர் புல்வாமா தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை .எனினும் 2019 பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின்போது சிஆர்பிஎஃப் வீரர்களின் மரணங்களை வைத்து வாக்கு சேகரிக்க பிரதமர் வெட்கப்படவில்லை. அவர் விரும்பியவாறே பாரிய பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

புல்வாமா தாக்குதல் குறித்து முன்னரே மோடிக்குத் தெரியவில்லையா, அல்லது ஏதேனும் கருத்து தெரிவித்தால் அதுவே எதிர்க்கட்சிகளுக்கு ஆதாரமாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதைப் பற்றி பேசக்கூடாது என்று முடிவு எடுத்து உள்ளாரோ ?

அது குறித்து ஒருபோதும் தெளிவான பதில் கிடைப்பதாக இல்லை என்றாலும், பயங்கரவாதிகள் புல்வாமாவில் தாக்குதல் நடந்த நாளில், மோடி “இந்திய வனப்பகுதிக்குள் ஒரு சாகசத்தில்” இருந்தார் என்பதை மட்டும் அறிந்து கொள்ள முடிகிறது


நன்றி : தி வயர்