குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய அந்த எழுச்சி என்பதை இந்தியாவின் கடைக்கோடி வரை தன்னிச்சையாக பல்வேறு வடிவங்களில் நாள் தோறும் சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது. அரசிற்கு எதிராக குழுக்கள்., அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் கிளர்ந்தெழும்போது அதனை ஒடுக்கவோ, அவர்களை குறிப்பிட்டு முடக்கவோ, தனிமனித தாக்குதல் தொடுக்கவோ அரசு முனையும். இது வழமையான ஒன்று. இதனை எல்லா அரசுகளும் ஜனநாயகப் போர்வையில் கடைபிடித்தே […]