கடந்த இரு தினங்களாக பாபர் பள்ளி விவகாரத்தில் சுன்னி வக்ஃப் வாரியம் இந்துத்துவ தரப்புடன் செட்டில்மென்ட் செய்து கொண்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் இது தொடர்பாக சுன்னி வக்ஃப் வாரியத்தின் வக்கீல்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜீலானி தனியார் ஊடகம் ஒன்றிற்கு இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.
எனவே இது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் தற்போது இந்துத்துவ தரப்பினருடன் செட்டில்மென்ட் செய்து கொள்வது தொடர்பான செய்தி உண்மை தான் என்று வக்ஃப் வாரியம் உறுதி செய்துள்ளது.
செட்டில்மென்ட் நடந்து முடிந்து விட்டதா ?
இது தொடர்பாக அக்டோபர் 17, வியாழக்கிழமை, சுன்னி வக்ஃப் வாரியம், பாபர் பள்ளி-ராம் ஜென்ம பூமி தொடர்பான புதிய தீர்வுத் திட்டத்தை மத்தியஸ்த குழு மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதை உறுதிப்படுத்தியது.
Download Android NewsCap App from Playstore : http://bit.ly/2nOa5Wp
இந்த வழக்கு தொடர்பான 40 நாள் விசாரணை புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்த பின்னர் வக்ஃப் வாரியத்தின் இந்த செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.கலிஃபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மத்தியஸ்த நிபுணர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழு புதன்கிழமை தனது அறிக்கையை சீல் வைத்த கவரில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
செட்டில்மண்ட் ஆஃபரில் என்ன உள்ளது ?
இந்த புதிய வரைவு திட்டத்தின் படி கர சேவகர்கள் என்று அழைத்து கொள்ளும் இந்துத்துவ அமைப்பினர் சட்டவிரோதமாக டிசம்பர் 6, 1992 அன்று இடித்து தரைமட்டமாக்கிய பாபர் பள்ளிவாசலின் இடத்தின் உரிமையை விட்டு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
- பல்வேறு கட்டங்களில் , முன்னர் கோயில்களைக் கொண்டிருந்த நிலத்தில் கட்டப்பட்டதாகக் (ஆதாரமின்றி இந்துத்துவ அமைப்புகளால்) கூறப்படும் மற்ற எல்லா பள்ளிவாசல்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகஸ்ட் 15, 1947 நிலவரப்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிலையை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாடு வழங்க வேண்டும்.
- அயோத்தியில் உள்ள மசூதிகளை அரசு புதுப்பித்து தர வேண்டும்.
- இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் தினசரி தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும்.
இவை தான் அந்த நிபந்தனைகள்.
இத்தனை நாட்களாக நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்த்து உச்சநீதிமன்றம் கூறும் போதெல்லாம் வக்ஃப் வாரியம் செய்து கொள்ளாத செட்டில்மென்ட் இப்போது மட்டும் ஏன் செய்து கொள்ள முன்வருகிறது என்று கேள்வி உங்களுக்கு எழுமானால்… அதற்கு பதில் அளிப்பது போல் சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ஏன் இந்த திடீர் மாற்றம் ?
பாபர் பள்ளி விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலமும் மிகவும் உறுதியாக நின்று தங்கள் உரிமைக்காக போராடி வந்த வக்ஃப் வாரியத்தின் தற்போதய தலைவர் ஜூஃபர் அஹமது ஃபாரூக்கி, மீது சில வழக்குகள் போடப்பட்டுள்ளன. அப்போதிலிருந்து கடந்த 2 மாதங்களாக வக்ஃப் வாரிய தலைவரின் உறுதிபாடு தளர்ந்து போக ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக வக்கீல் அன்சாரியின் கருத்தும் உள்ளது.
பாபர் பள்ளி – ராம ஜென்ம பூமி விவகாரத்தின் தரப்பினர் சுன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆவர். இவர்களுக்கு மத்தியில் தான் 2010 ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூவருக்கும் இடையில் பிரித்திருந்தது.
மேலே குறிப்பிட்ட பெயரளிவிலான நிபந்தனைகளை கூட நிர்மோஹி அகாராவின் ஒரே ஒரு மஹாந்தை தவிர மற்றவர்கள் ஒப்பு கொள்ள முன்வரவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
Download Android NewsCap App from Playstore : http://bit.ly/2nOa5Wp
இந்துத்துவ அமைப்புகள் இந்த தீர்வுக்கும் உடன்படவில்லை என்றால், அது எவ்வாறு செயல்படுத்தப்படலாம் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மேலும் விசாரணைக்கு என்று இத்தனை நாட்கள் செலவழித்த பின்னர், இந்த மத்தியஸ்த குழு தீர்வை உச்சநீதிமன்றம் ஏற்கத் தயாராக இருக்குமா என்பதும் தெளிவாக்கபடவில்லை.
வழங்கப்பட்டுள்ள இந்த குழுவின் அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Download Android NewsCap App from Playstore : http://bit.ly/2nOa5Wp