International News

வீடற்றவர்களுக்காக இனி பள்ளிவாசலில் தங்குமிடம் !

சிங்கப்பூரில் வசதி குறைந்த பல தொழிலாளர்கள் வீடில்லாமல் இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் உறங்கி வருகின்றனர் என்பதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மஸ்ஜித் சுல்தான் நிர்வாகம் வீடற்றவர்களுக்காக தரைத் தளத்தை ஒதுக்க முன் வந்துள்ளது.

ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த  இடமானது பள்ளிவாசல் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்திலாகும். மேலும் இன மத வேறுபாடுகளின்றி யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு நிரந்தர தங்குமிடம் அமையும் வரை இங்கு தங்கி கொள்ளலாம் என்று பள்ளிவாசல் நிர்வாகி முஹம்மத் ஐஸுதீன் தெரிவித்துளளார். 

இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணி வரை இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இயற்கை பேரிடர் காலங்களிலும் சகல மதத்தவரும் தஞ்சம் புகும் இடமாக தமிழக பள்ளிவாசல்கள் திகழ்வதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கும் அறைகளில்  ஒரு விசிறி மற்றும் ஐந்து புதிய செட் ஒற்றை அளவிலான மெத்தை மற்றும் தலையணைகள் பொருத்தப்பட்டுள்ளன. அறையின் ஒரு மூலையில் இலவச பாட்டில் தண்ணீரையும் காணலாம்.

வீடற்றவர்கள் மசூதியில் பணியமர்த்த பட்டிருக்கும்  பாதுகாப்புக் காவலரிடம் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.