குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் கஷ்மீரின் லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைகளுக்கு மத்தியில் கடும் குளிரிலும் நாட்டிற்காக இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் பனிச்சாரல்களை தாங்குவதற்கு தேவையான காலணிகள், கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் போன்றவை பற்றாக்குறை இருப்பதாக CAG தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் சியாச்சின் பகுதியில் ஆட்கள் செல்ல முடியாத உட்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கு அந்த சூழலுக்கு ஏற்ற உணவு கிடைப்பதே கடினமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இராணுவத்தினர் பருவநிலையால் ஏற்படும் நோய்களுக்க ஆளாகின்றனர்.
ராணுவ வீரர்களிடையே பனி கண்ணாடிகளின் பற்றாக்குறை 62 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை உள்ளது.அதிக உயரமுள்ள பகுதிகளில் மிக மோசமான வானிலைக்கு ஆளாவதால் ராணுவ வீரர்களின் முகங்களும் கண்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. கடந்த நவம்பர் 2015 முதல் செப்டம்பர் 2016 க்கு இடையில் ராணுவத்தினருக்கு பூட்ஸ் கிடைக்காததால் பழைய பூட்ஸ் மற்றும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பூட்ஸ்களை அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நரேந்திர மோடி எங்கே சென்றாலும் இராணுவத்தைப் பற்றி பேசி அனுதாபம் தேடிக் கொள்கிறாரே தவிர இராணுவத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தவறிவிட்டார் என சமூக வளைதளங்களில் கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.