சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது 2 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.
அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் ஈ.வி.எம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அஸ்ஸாம் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்தது ஆகிய இரண்டு விஷயங்களை சாம்னா எழுப்பியுள்ளது.
சாம்னா தலையங்கத்தில், தேர்தல் ஆணையம் நாட்டில் இறந்துவிட்டது அல்லது ஆளும் பாஜக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.. மத்திய பாஜக அரசு அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது என்றும் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.