காஷ்மீரில் மக்களின் உரிமையை பறித்தமைக்கு எதிராக ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். அதே போல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்திலும் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் பாஜக வின் மத அடிப்படையிலான குறியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.
இந்த மசோதா இந்தியாவின் மத பன்மைத்துவத்திற்கு எதிரானது. இந்த மசோதாவை ஜனநாயக முறையில் எதிர்க்குமாறு நீதியை நேசிக்கும் அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிராக உள்ளது.
அன்பான சகோதர சகோதரிகளே, 2019 , டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டதிருத்த மசோதா, ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட இருப்பதற்கு வெறும் எண்ணிக்கையிலான வாக்குகள் மட்டுமே முக்கியத்துவம்வாய்ந்த்தாக உள்ளது. இந்திய அரசியல் சானசத்தின்படி ஆர்டிகிள், 14,15 மற்றும் 25 ஆகியவற்றை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது. இஸ்லாமிய சமூகத்தை விட்டுவிட்டு மற்ற இந்து,கிறுஸ்தவ, சீக்கிய, பௌத்த, ஜைன, பார்சிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது முஸ்லிம்களை மத ரீதியாக பாகுபடுத்துவதாகும் ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்கு மத அடிப்படை இருக்க கூடாது என்பதே இந்திய அரசியல் சாசனம் அறிவிக்கும் தத்துவம் இந்த சட்டத்திருத்த மசோதா சக முஸ்லிம்களை அச்சுறுத்துவதாக உள்ளது.
இந்திய முஸ்லிம்கள், இங்கே வாழ தங்களது மதத்தை விட்டுக்கொடுத்து வேறு எதுவும் மதத்தை தேர்ந்தெடுத்து மாறிக்கொள்ள இது மறைமுகமாக நிர்பந்திக்கின்றது. என்ஆர்சி சட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாத இந்த சட்டம் முஸ்லிம்களை பாகுபடுத்துவதிலும் அவர்களை தனிமைப்படுத்துவதிலுமே அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அஸாமில் 19லட்சம் மக்களை குடியுரிமை சட்டம் என்கிற பெயரில் பெயர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது அவர்கள் அனைவரும் தலித்துகள்,பழங்குடிகள், முஸ்லிம்கள் மற்றும் எல்லா சமூகத்திலும் உள்ள ஏழைகள் ஆவர். ஒவ்வொரு ஆவணங்களுக்காகவும் அவர்கள் கோடிக்கோ கோடி ஓடித்திரிந்து ஆதாரங்கள் திரட்டுவதை பார்க்கும் யாவருக்கும் கண்களில் ரத்தம் வடியும்.
அப்படியொரு நிலையை ஒட்டுமொத்த இந்தியாவிலும் முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மறைமுக ஏற்பாடாக உள்ளது. இந்த திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறையானால் பிறகு இந்திய முஸ்லிம்கள் அனைவரும் திறந்தவெளி சிறையில் வாழும் அகதிகளாக்கப்படுவார்கள். ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் அவர்களது ஒரே பிரச்சனை முஸ்லிமாக இருப்பது தான் என்கிற கொடுமையான நிலையை அவர்களது தலையில் சுமத்துவது சுதந்திர இந்தியாவில் வாழ அவர்களுக்கு தகுதியில்லை என்பதையே உணர்த்துகிறது.
ஆவணங்களை சமர்பித்த பின்னரும் ஏதோ ஒரு நெருக்கடி கொடுக்கவும், நிராகரிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது எனில் அவர்களது பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாக்கப்படுகிறது. இந்த மசோதா முழுக்க முழுக்க மதசார்பின்மைக்கும் மத சுதந்திரத்திற்கும் எதிரானது என்கிற காரணத்தால் நான் எனது பதவியிலிருந்து விடுவித்துக்கொள்ள இந்த பதவித்துறப்பு கடிதத்தை சமர்பிக்கிறேன் நேர்மையும் நீதியுமல்லாத இந்த சாசனத்தின் கீழ் பணிசெய்யும் மற்ற அனைத்து அதிகாரிக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டு நாளை முதல் நான் அலுவலகத்திற்கு வரப்போவதில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
இறுதியாக, நான் எப்போதும் அமைதி,நீதி மற்றும் மதச்சார்பற்ற தன்மையையே விரும்புவன், எனவே OC, OBC மற்றும் முஸ்லிம்களுக்கு வைக்கும் வேண்டுகோள் இது தான். ஜனநாயகம் அனுமதிக்கும் முறையில் போராடுமாறும், தேச நலனில் அக்கறையும் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட எத்தனையோ இந்து நண்பர்கள் எனக்கு உண்டு, அவர்களிடம் நான் வேண்டுவது இது மட்டுமே, இந்த மசோதாவினை எதிர்த்தும் சக முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும் மேற்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு இதனை கொண்டு சென்று நீதி கிடைக்க போராடுமாறு, சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சர்வீசில் இருக்கும் அதிகாரிகளையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-அப்துர் ரஹ்மான்
மேலும் எனது ஆவணத்தை காண்பிக்க முடியாது. இதற்காக என்னை தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்ல பட்டாலும் சரியே நான் தயார் என்று அப்துர் ரஹ்மான் முழங்கியுள்ளார்.
பாசிசம் வெறிகொண்டு பரவிவரும் காலத்தில் தைரியமாக, அதுவும் தனி மனிதர்களாக அதை எதிர்த்து களம் கண்டு வரும் திரு.கண்ணன் கோபிநாத், செந்தில் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தான் உண்மையான ஹீரோக்கள், திரையுலக கூத்தாடிகள் இல்லை என்பதை மக்கள் உணரும் காலம் மிக விரைவில் வரத்தான் போகிறது.!