Indian Judiciary Just In

‘ஒரே பாலின திருமணத்திற்கு இந்தியாவில் அனுமதி உண்டா?’ என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

“ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணத்தை இந்திய சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள முடியுமா, அப்படியானால், அதன் விவரங்கள் அளிக்கவும். இல்லையென்றால், அதற்கான காரணங்களை கூறவும் ” என ராஜ்ய சபாவில் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார்.

ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் சட்ட பிரிவு 377 ஐ ரத்து செய்து, உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 2018 இல் தீர்ப்பு வழங்கியது குறிபிடத்தக்கது.