Islamophobia

அரபு நாடுகளில் இருந்து கொண்டு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை ..

ஜி.சி.சி.யில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து இந்துத்துவாவினர் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் #Send_Hindutva_Back_home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி

மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் #COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து உதவிகளும் சிகிச்சைகளும் இலவசமாக இங்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் முஸ்லீம் குடிமக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்கின்றனர்”. என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதவெறியை தூண்டும் விதமாக இஸ்லாத்திற்கு எதிராக கருத்துப் பதிபவர்களின் பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து #Send_Hindutva_Back_home என்ற ஹேஸ் டேகிட்டு தம்முடன் பகிருமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது அழைப்புக்கு பதிலளித்த அவரைப் பின்பற்றும் வளைகுடா நாடுகளின் முக்கியஸ்தர்கள் மத்திய கிழக்கில் பணிபுரியும் ஊழியர்களின் மதவாத போக்குகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஹென்ட் அல் காசிமி, சமூக ஊடகங்களில் முஸ்லீம் எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் எழுதுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, வாழ்வாதாரத்தை தேடி கொண்டு எங்களுக்கு எதிராகவே பேசுவீர்களானால், அது கவனிக்கப்படாமல் போய் விடாது என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் வெறுப்பு குற்றங்கள் குறித்து இத்தனை நாட்கள் உறங்கி கொண்டிருந்த அரபிகள் இன்று தட்டி எழுப்பப்பட்டு விட்டனர் என்ற நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.