Amit Shah CAA Just In

‘அமித்ஷா மிருகத்தை வரலாறு காறித்துப்பும் ‘ பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் கடும் விமர்சனம்!

டெல்லியில் அமித் ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பாஜக ஆதரவாளர்களால் ஒரு சிஏஏ எதிர்ப்பாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்துறை அமைச்சர் அமித் ஷா வை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அமித் ஷா ஒரு விலங்கு என்று குறிப்பிட்ட காஷ்யாப், வரலாறு இந்த மிருகத்தை காறித்துப்பும் என்று கடுமையாக சாடியுள்ளார்.

என்ன நடந்தது?

அமித் ஷா பாஜக வின் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டில்லி பாபர்பூரில், பொது கூட்டம் ஒன்றில் பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் சிஏஏ வுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இதனை சகித்து கொள்ள முடியாத பாஜக வை சேர்ந்த குண்டர்கள் சிலர் அந்த வாலிபர் மீது நாற்காலிகளை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தனையும் அமித் ஷா முன் நடைபெற்று கொண்டிருக்க, “நிறுத்துங்கள், செக்யூரிட்டி அவரை அப்புறப்படுத்துங்கள்” என்று தான் கூறுகிறாரே தவிர அப்பாவி எதிர்ப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எந்த வித கண்டனமும் தெரிவிக்கவில்லை.

உறங்கிப்போன ஊடகங்கள்:

சரி இது பரவாயில்லை. .. ஆனா இதையும் தாண்டி அந்த வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தும் , தனக்கு முன் இருக்கும் கூட்டத்தை நோக்கி “பாரத் மாதா கி ஜெ” என கோஷம் போட ஆரம்பித்து விட்டார் அமித் ஷா. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், பெரும்பான்மை ஊடகங்களோ முழு பூசினியை சோற்றில் மறைத்த கதையாய் இந்த சம்பவத்தை மூடி மறைத்து விட்டனர். இதை பெரிது படுத்தவே இல்லை. இந்நிலையில் தான் அனுராக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துளளார்.

“நமது உள்துறை அமைச்சர் ஒரு பயந்தாங்கோலி. போலீஸ், குண்டர்கள், ராணுவம் என அனைத்தையும் வைத்து கொண்டு, சொந்த பாதுகாப்பை மேலும் மேலும் அதிகரித்து கொண்டு அதே சமயம் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடைபெற செய்கிறார். அமித் ஷாவின் நடத்தை மிகவும் கீழ்த்தனமானது, இழிவானது. வரலாறு காறித்துப்பும் இந்த மிருகத்தை பார்த்து.” என கடுமையான சொற்களால் சாடியுள்ளார் காஷ்யாப்.

அதுமட்டுமின்றி முன்னதாக பிரதமர் மோடி, அமித் ஷா , ஏபிவி பியினர் ஆகியோரை தீவிரவாதிகள் என்றும் அரசாங்கத்தை ஆள்பவர்களை பாசிஸ்டுகள் எனவும் அனுராக் கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.