நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 3 முக்கிய செய்தித்தாள் ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டைம்ஸ் குழுமம் , தி டெலிகிராபை வெளியிடும் ஏபிபி குழுமம் மற்றும் தி இந்து ஆகியவை தான் அந்த 3 ஊடகங்கள்.
டைம்ஸ் குழுமத்தை கட்டுப்படுத்தும் பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் , “ஒரு முடக்கம் உள்ளது உண்மை தான் .மத்திய பாஜக அரசு விரும்பாத செய்திகளை நாங்கள் வெளியிட்டது காரணமாக இருக்கலாம்.” என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தகர். டைம்ஸ் குழுமத்தின் விளம்பரங்களில் சுமார் 15% அரசாங்கத்திடமிருந்து வருகிறது, என்று அந்த நிர்வாகி கூறினார்.
ஏபிபி குழுமத்தின் 2 அதிகாரிகள் கூறுகையில் கடந்த ஆறு மாதங்களாக அரசு விளம்பரங்களில் 15% வீழ்ச்சியைக் கண்டுள்ளோம் என்றார்கள் . “உங்கள் தலையங்கக் கவரேஜில் நீங்கள் ஆளும் பாஜக அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செய்தி வெளியிடாமலும், மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதையும் எழுதினால் , உடனே விளம்பர விநியோகத்தை நிறுத்துவது தான் தண்டிப்பதற்கு இருக்கும் ஒரு எளிமையான வழி” என்று நிர்வாகிகளில் ஒருவர் கூறினார்.
விளம்பரத்தை நிறுத்துவதற்கான முடிவை கூட பாஜக அரசு எங்களிடம் தெரிவிக்கவில்லை. எந்த நிலையிலும் பத்திரிகை சுதந்திரம் பராமரிக்கப்பட வேண்டும், அரசு இவ்வாறெல்லாம் செயல்பட்டாலும் கூட அது பராமரிக்கப்படும் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் தி இந்து நாளிதழ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதற்கு பிந்தைய மாதங்களிலிருந்து , இந்து நாளிதழ் அரசாங்கத்தின் விளம்பரங்களில் வீழ்ச்சியைக் கண்டது.
பாஜக அரசாங்க இவ்வாறு கு றிவைத்து விளம்பரங்களை முடக்குவதை காங்கிரஸ் விமர்சித்து உள்ளது
“அரசை விமர்சிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டால் , ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் ,அதிகார துஷ்பிரயோகம் செய்தும் அந்நிறுவனங்களுக்கு விளம்பரங்களை முடக்குவோம் என்பது தான் அரசு மீடியாக்களுக்கு தெரிவிக்கும் செய்தியாக உள்ளது ” என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் திரு. ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
இருப்பினும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி வழக்கம் போல இந்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.மேலும் பாஜக செய்தி தொடர்பாளர் நளின் கூறுகையில் “பாஜக மீடியா வின் சுதந்திரத்தை தடுக்கிறது என்று கூறுவது நகைப்பிற்குரியது என்றார்.