Corona Virus Islamophobia Tamil Nadu

முஸ்லிம் என்பதால் பிரசவம் பார்க்க மறுப்பு; களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ..

காங்கயேம் :காங்கயத்தை சேர்ந்தவர் பல்கீஸ். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது கணவரை அழைத்து கொண்டு திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இருவரும் வழக்கமாக பரிசோதனை செய்து வந்த சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைந்துள்ள திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பிரசவம் பார்க்க வேண்டிய நாள் என்பதால் மருத்துவமனையில் அட்மிட் செய்யும் நோக்குடன் சென்றுள்ளனர்.

எனினும் கடந்த 8 மாதங்களாக (கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக பாசிஸ்டுகளால் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரத்திற்கு முன்) நட்பாக சிகிச்சை மேற்கொண்டு வந்த மருத்துவர் மல்லிகா மருத்துவமனை தரப்பில் இருந்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக இங்கு பிரசவம் பார்க்க முடியாது என கூறி உள்ளனர்.

சமபந்தம் இல்லாமல் சாக்கு போக்கு கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பிறகு விசாரித்து பார்த்ததில் திவ்யா மருத்துவமனை மட்டுமின்றி வேறு மருத்துவமனைகளிலும் முசுலீம்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருவதை அறிந்து கொண்டுள்ளனர்.

இதனை அறிந்து அதிர்ந்து போன அந்த தம்பதியினர் இங்கு விவாதம் செய்வதால் நமக்கு தான் ஆபத்து என உணர்ந்து கொண்டு உடனே வேறொரு மருத்துவமனைக்கு (ரவணா மெடிக்கல் சென்டர்) சென்று விட்டனர்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ட்விட்டரில் இது குறித்து பதிவு செய்து, அதில் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் மற்றும் தமிழக முதல்வர் இருவரையும் டாக் செய்திருந்தார். உடனே களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி எண்ணை கேட்டுள்ளார். தொலைபேசி எண் வழங்கப்படவே உரிய உதவியை ஆட்சியர் செய்துள்ளார்.

இதற்கிடையே உதவும் குணம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கனகராஜ், பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் மருத்துவமனைக்கு சிலரை பக்கபலமாக இருக்க அனுப்பி உள்ளார். இதை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் நியூஸ் கேப் உடன் பகிர்ந்தார்.

திமுக எம்பி டாக்டர் செந்தில் குமாரும் இவ்வாறான மதவெறி சிந்தனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ ராஜாவும் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தமிழகம் என்பதாலும் மாதசார்பற்ற சிந்தனையாளர்கள் அதிக அளவில் தமிழ் நாட்டில் இன்னும் உள்ளனர் என்பதாலும் உதவி கிடைக்கப்பெற்றது. இதுவே வட இந்திய மாநிலத்தில் இவ்வாறு நடைபெற்று இருந்தால் ?