கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார்.
புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியுடன். மகாராஷ்டிராவை 3 மாநிலங்களாகவும், உத்தரப்பிரதேசம் 4 ஆகவும், கர்நாடகா 2 ஆகவும் பிரிக்கப்படும் என கூறினார்.
எனினும் தமிழ்நாடு பிரிக்கபடுமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
“நாம் அனைவரும் வட கர்நாடகா தனி மாநிலத்திற்கான இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும், புதிய மாநிலம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போக்குவரத்து இன்னும் இது போன்ற போன்ற பல பிரச்சனைகளால் பெங்களூரு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. 10 கிமீ தூரத்தை கடக்க 1 மணி நேரம் செலவழிக்க வேண்டி உள்ளது, அதை விட வேகமாக நடந்தே சென்று விடலாம் என்ற நிலை நிலவுகிறது.
“பெங்களூருவில் பல IT/BT நிறுவனங்கள் இருந்தன, புதிதாக எதுவும் தேவை இல்லாமல் இருந்தது. வட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
“பெலகாவியில் சுவர்ண விதான் சவுதாவும், தார்வாட்டில் கர்நாடக உயர் நீதிமன்ற பெஞ்சும் நம்மிடம் உள்ளன. கிட்டூரில் சர்வதேச விமான நிலையம் விரைவில் ஏற்படுத்தப்படும். புதிய மாநிலம் வட கர்நாடகா பகுதியின் வளர்ச்சிக்கு உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.
பெலகாவி பார் அசோசியேஷன் தலைவர் பிரபு யட்நட்டி, ஹன்மந்த் கொங்காலி, எம்பி ஜிராலி, ஆர்பி பாட்டீல், ஜெகதீஷ் சாவந்த் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.