பிரதமர் மோதியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோதி.திருட்டு சம்பவம் நடைபெற்ற தினத்தில் அவர் டில்லியில் இருந்து அஹ்மதாபாத் (குஜராத்) செல்வதாக இருந்தது.அவர் தனது பர்சில் (கைப்பையில்) ரூ.56,000, 2மொபைல்கள்,விமான டிக்கட் மற்றும் சில ஆவணங்களை வைத்துள்ளார். நேற்று (12-10-19) டில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனின் வாயிலுக்கு வெளியே (காலை 6.30 மணி அளவில் ) ஒரு ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து தமயந்தி இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் 100 போலீசார் அடங்கிய 20 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 50 நபர்களை போலீசார் கடுங்காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
டில்லியில் திருட்டு சம்பவம் பன் மடங்கு அதிகரித்து வரும் வேலையில் மோதியின் மருமகளும் இதற்கு பலியாகியுள்ளது சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது என்றும் ஒரு சாமானியர் பணத்தை இழந்து தவிக்கும் போது இவ்வாரு 100 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து துரிதமாக போலீசார் செயல்படுவார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தில்லியில் போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் குடியிருப்புகளிலிருந்து 300 மீட்டர் தொலைவில் வைத்து தான் இந்த குற்றம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தை குறித்து டி.சி.பி (வடக்கு) மோனிகா பரத்வாஜ்,கூறுகையில் “திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து சிவில் லைன்ஸ் வரை சி.சி.டி.வி காட்சிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விசாரணை நடந்து வருகிறது, விரைவில் திருட்டில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்படுவார்கள் ” என்றார்.